பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றம்

415

சந்தானாச்சாரியார்


  
குற்றம்(3) = காமம், வெகுளி, மயக்கம் (அல்லது) ஐயம், திரிபு, அறியாமை.
 
குற்றம்(10) = குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக்கூறல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், வழூஉச்சொல் புணர்த்தல், மயங்கவைத்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை .

கூ


கூலம்(8) = நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில்.

கூலம்(16) = நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள், கொள், பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை,

கொ


கொடுந்தமிழ்நாடு(12) = தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேழி, பூழி, பன்றி, அருவா, அருவா வடதலை, சீதம், மலாடு, புனனாடு.
 
கொடை(3) = வரைவின்றிக் கொடுத்தல், புகழ்வோர்க்குக் கொடுத்தல், இரப்போர்க்குக் கொடுத்தல்.

கோ

 
கோசம்(5) = அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம்.

கௌ


கௌவியம் (5) = பால், தயிர், நெய், கோசலம், கோமயம், (பஞ்சகவ்வியம்.)



சக்கிரவர்த்திகள் (6) = அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுற்சன், புரூரவன், கார்த்தவீரியன்

சங்கு(4) = வலம்புரி, இடம்புரி, சலஞ்சலம், பாஞ்ச சன்யம்.
 
சத்திகள் (5) = இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசக்தி, ஆதிசத்தி, பராசத்தி

சந்தானாச்சாரியார் (4) = மெய் கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார்.