பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இங்ஙனம்

39

இடம்


இங்ஙனம் = இப்படி, இவ்விதம்
இங்கன் = இவ்விடம்
இசலல் = வாதாடல்
இசிதல் = நீளுதல்
இசித்தல் = ஒடித்தல், இழுத்தல், உரித்தல், சிரித்தல்
இசும்பு = வழுக்குகிலம், ஏற்றமும் இறக்கமுமுள்ள கடுவழி
இசை = புகழ், கீதம், ஒலி, ஒப்புக்கொள்,பண்,சொல், இசைத் தமிழ், இனிமை, பொன், ஊதியம்
இசைதல் = சம்மதித்தல், பொருந்துதல், கிடைத்தல், இயலுதல்
இசைப்பு = இணக்கம்
இசைப்புள் = குயில், அன்றில்
இசைப்பொறி = செவி
இசை மடந்தை = சரஸ்வதி
இசைமை = கீர்த்தி
இசையெச்சம் = எஞ்சிய பொருள், உணர்த்தும் சொல்
இச்சகம் = முகமன், முகஸ்துதி
இச்சை = விருப்பம், தொண்டு, கேள்வி
இஞ்சி = மதில், கோட்டை
இடக்கயம் = துகிற்கொடி
இடக்கரடக்கல் = பெரியோர் முன் சொல்லத்தகாதவற்றை வேறுசொல்லால் மறைத்துக் கூறுதல்
இடக்கர் = குடம், பெருங்காமுகர்
இடக்கல் = தோண்டல்
இடக்கை = ஒருவகை வாத்தியம், இடப் புறக்கை
இடங்கணி = சங்கிலி
இடங்கம் = உளி
இடங்கர் = குடம், முதலை, காமுகர், நீர்ச்சால்
இடங்கழி = ஓர் அளவு, நெருங்கல், எல்லைகடக்கை, காம மிகுதி, மரத்தினால் செய்யப்பட்ட கலம்
இடங்காரம் = மத்தளத்தின் இடப்பக்கம், வில்லின் நாண் ஒலி
இடங்கை = இடக்கை
இடசாரி = இடப் பக்கமாகச் சுற்றி வருதல்
இடத்தல் = தோண்டல், பிளத்தல், அகலப்பண்ணுதல்
இடத்தலைப்படுதல் = குறித்த இடத்தில் கூடுதல்
இடமன் = இடப்புறம்
இடம் = செல்வம், அகலம், வலி, இடப்பக்கம், இளக்காரம், சம்மதி, தருணம், தலம், வீடு, காலம்