பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சபை

416

சித்தர்


  
சபை(5) = (திருவாலங்காடு) இரத்தினசபை, (சிதம்பரம்) கனகசபை, (மதுரை) வெள்ளிச்சபை, (திருநெல்வேலி) தாமிரசபை, (திருக்குற்றாலம்) சித்திரசபை

சமயகுரவர்(4) = திருஞான சம்பந்தசுவாமிகள், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள்

சமயம்(6) = கபிலமதம், கணாதமதம், பதஞ்சலி மதம், அக்ஷபாத மதம், வியாச மதம், ஜையினி மதம், (வேதாந்த மதம்)

சயமம்(6) = சைவம் (சிவன்), வைஷ்ணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி), சௌரம் (சூரியன்), காணாபத்தியம் (கணபதி), கௌமாரம் (முருகன்), வைதிகமதம்.

சயனம்(5) = இலவம் பஞ்சு, வெண் பஞ்சு, செம்பஞ்சு, இறகு, அன்னத்தூவி

சரீரம்(3) = தூலம், சூக்கு, காரணம்

சா


சாதி (4) = திராவிடர், ஆந்திரர், கன்னடர், மராட்டியர் (பிராமணன், க்ஷத்தரியன், வைசியன், சூத்திரன்) இவை ஆரியர் முறை.
 
சாத்திரம்(6) = வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம், பூருவ மீமாஞ்சை, உத்தரமீ மாஞ்சை

சாத்வீக குணலட்சணம்(16) = அசையாமை, மனஉறுதி, சாமர்த்தியம், மென்மை, நொய்மை, மகிழ்ச்சி, நேர்மை, சுத்தி, புண்ணிய முயற்சி, பொறுமை, மறவாமை, திருப்தி, முத்தியடையும் இச்சை, பெருங்கருணை, அந்தக்கரண அடக்கம், புறக்கரண அடக்கம்.
 

சி


சித்தர்(9) = சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திர நாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்