பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணியத்தோற்றம்

424

புலமையோர்




  
(10 லட்சம்) ஊர்வன, (11 லட்சம்) நீர்வாழ்வன, (10 லட்சம்) தாவரம், (20 லட்சம்) (இவையே 84 லட்சயோனி பேதம்)
 
புண்ணியத்தோற்றம் (4) = தவம், ஒழுக்கம், கொடை, கல்வி.
 
புண்ணியம்(9) = எதிர்கொளல், பணிதல், பீடத்தில் அமர்த்தல், பாதம்
அலம்பல், அருச்சித்தல், தூபம் கொடுத்தல், தீபம் காட்டல், புகழ்தல், அமுதமேந்தல்.
 
புரம்(3) = இருப்பு மதில், வெள்ளி மதில், பொன் மதில், (முப்புரம்.)
 
புராணம்(18) = பிரமம், பதுமம், வைணவம், சைவம், பாகவதம், பவிஷ்யம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பிரம்மகைவர்த்தம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மச்சம், காருடம், வாயவியம், (பதிணெண்புராணம்) (மார்க்கண்டேயம்,சைவம், பவிடியம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மற்சம், வாயவியம், சிவபரத்துவம் கூறும்) (வைணவம், பாகவதம், நாரதீபம், காருடம், விஷ்ணுபரத்துவம் கூறும்) (பதுமம், பிரமம், பிரம்ம வரத்துவம் கூறும்) ஆக்கினேயம் அக்கினியின் சிறப்புக்கூறும்) (பிரம்ம கைவர்த்தம் சூரியன் பெருமை கூறும்).
 
புராணலட்சணம்(5) = உலகத்தோற்றம், ஒடுக்கம், முனிவர், அரசர் மரபு, அவர் சரிதம், மனுவந்தரம்.
 
புரி (7) = அயோத்தி, மதுரை, மாயா, காஞ்சி, காசி, அவந்தி, துவாரகை, (சப்தபுரி)
 
புருடார்த்தம்(4) = அறம், பொருள், இன்பம், வீடு. (தருமார்த்தகாமமோட்சம்)
 
புலமையோர்(4) = கவி (ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தாரம் ஆகிய கவிகளைப் பாடுபவர்) கமகன் (அறம்பொருளைச் செம்மையாக விவகரிப்பவர்) வாதி (தக்க உதாரணம் காட்டிப் பிறமதம் மறுத்துத் தம்மதம் நிறுத்துவோர்) வாக்கி (அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை விரித்துரைப்போர்)