பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலன்

425

பொருள்


  
புலன்(5) = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
 
புறச்சமயம்(6) = தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம்.
 
புறத்திணை(8) = வெட்சி (பசுகவர்தல்) கரந்தை (பசுவைமீட்டல்) வஞ்சி (பகைவர் மேல்செல்லல்) காஞ்சி (எதிர்த்தல்) நொச்சி (மதிலைக்காத்தல்) உழிஞை (மதிலை வளைத்தல்) தும்பை (அஞ்சுமாறு போரிடல்) வாகை (வெற்றி).
 
புறப்புறச்சமயம்(6) = உலகாயதம், சௌத்திராந்திகம், யோகாசாரம், மாத்திமிகம், வைபாடிகம், ஆருகதம்.
 

பூ


பூ(4 ) = கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ.
 
பூதகாரியம்(25) = (பிருதிவி) தோல், எலும்பு, நரம்பு, தசை, மயிர், (அப்பு) நீர் உதிரம், மச்சை, மூளை, சுக்கிலம், (தேயு) ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சோம்பல், (வாயு) ஓடல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல், (ஆகா 54 சம்) குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்.
 
பூதம்(5) = நிலம், நீர், தீ, காற்று விசும்பு (ஐம்பெரும் பூதம்)

பெ


பெண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம்(10) = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மனை, நீராடல், ஊசல்.
 
பெண்வகை(4) = பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி.
 
பெரியோர் இயல்பு (7) = அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, பொறுமை.

பே


பேறு(16) = புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள், (பதினாறு பேறு)

பொ


பொருள்(4) = அறம், பொருள், இன்பம், வீடு (நாற்பொருள்)