பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருள்

426

மதம்




  
பொருள்(3) = கல்விப் பொருள், செல்வப் பொருள், புத்திரப் பொருள், (முச்செல்வம்).
 
பொருள்கோள்(8) = ஆற்று நீர், மொழிமாற்று, நிரல் நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று.
 
பொழுது(6) = மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு (சிறு பொழுது), கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் (பெரும் பொழுது).
 
பொறி(5) = மெய், வாய், கண், மூக்கு, செவி(ஐம்பொறி)

பொன்(4) = ஆடகம், கிளிச்சிறை, சாதருபம், சாம்பூநதம்.
 

போ


போகம்(8) = பெண், ஆடை, அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூம்படுக்கை



மங்கலம்(8) = சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, கொடி, இணைக்கயல் (அட்டமங்கலம்).
 
மணம்(8) = பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பை,சாசம், (எண்வகைமணம்).
 
மணி(9) = கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம், (நவமணி).
 
மண்டலம்(3) = சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்னிமண்டலம்.
 
மண்டலம் (7) = வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு.

மண்டலம் (7) = வாயுமண்டலம், வருணமண்டலம், சந்திரமண்டலம், சூரியமண்டலம், நட்சத்திரமண்டலம், அக்கினிமண்டலம், திரிசங்குமண்டலம்.

மதம்(7) = (கொள்கை ) உடன்படல், மறுத்தல், தாஅநாட்டித்தனாது நிறுத்தல், பிறர் தம் மத மேற்கொண்டு களைதல், இருவர் மாறு கோள் ஒருதலைத் துணிதல், பிறர் நூல் குற்றம் காட்டல், பிறிதொடுபடாஅன் தம் மதம் கொளல் (ஏழுவகை மதம்).