பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடைதல்

41

இண்டை


இடைதல் = பின்வாங்குதல், மனம் தளர்தல், சோர்தல், தாழ்தல், விலகுதல்
இடைதெரிதல் = சமயம் அறிதல்
இடைப்பிறவரல் = இடையில் பிறசொல் வருதல்
இடையல் = துகில், மெலிதல்
இடையறவு = இடைவிடுகை
இடையறுதல் = தடைப்படுதல்
இடையீடு = தடை, குற்றம், நடுவே தோன்றுதல், வேறுபாடு, நடுவே விடுகை
இடையுவா = பெளர்ணிமை
இடையூறு = துன்பம், தடை
இட்டகாமியம் = விரும்பியதைப் பெறச்செய்யும் செயல்
இட்டளம் = துன்பம், தளர்வு, நெருக்கம்
இட்டன் = அன்பன், நாயகன்
இட்டசித்தி = காரியம் முடிவுபெறல்
இட்டறுதி = குறித்த காலம், இக்கட்டு, வறுமை
இட்டார்த்தம் = விரும்பிய பொருள்
இட்டி = ஈட்டி, யாகம்
இட்டிகை = செங்கல், பலிபீடம்
இட்டிடை = அற்பம், துன்பம், வறுமை, சிறுமை, சிறிய இடுப்பு
இட்டிது = சிறியது, அருகு
இட்டிமை = சிறுமை, ஒடுக்கம்
இட்டு = விருப்பம், அற்பம், நுணுக்கம், தொடங்கி, காரணமாக
இணங்கன் = பாங்கன்
இணரெரி = பல சுடருள்ள நெருப்பு
இணர் = குலை, தளிர், பூங்கொத்து, பூ, கொத்து, இதழ், பூந்தாது, காய்க்குலை, தொடர்ச்சி, மாமரம்
இணர்தல் = நெருங்குதல்
இணுக்கு = இலைக்கொத்து, கைப்பிடியளவு, வளார்
இணுங்கல் = முரித்தல்
இணை = இரண்டு, உவமை, துணை, சேர்க்கை, ஒப்பு, எல்லை, கூந்தல், இசைவு
இணைதல் = இசைதல், ஒத்தல்
இணை விழைச்சு = புணர்ச்சி
இணைவு = கலப்பு
இண்டர் = இடையர், இழிமக்கள்
இண்டு = தொட்டால் சிணுங்கி
இண்டை = தாமரை, தலை மாலை