பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடிகைவெண்பா

436

காப்புமாலை


  
பத்தாக அமைய அந்தாதித் தொடை பொருந்த முப்பது பாடல்களைக் கொண்டு விளங்குவது.



கடிகைவெண்பா = தேவரிடத்தும் அரசரிடத்தும் நடக்கும் காரியம் கடிகை அளவில் தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவால் பாடப்படுவது.

கடைநிலை = வாயில் காவலனிடம் தன் வருகையைக் கூறுமாறு வாயிற்கடைக்கண் கூறும் முறையில் பாடப்படுவது.

கண்படைநிலை = அரசரும், அரசரைப் போன்றவரும். சபையில் நீண்ட நேரம் தங்கி இருப்பதை அறிந்த அமைச்சரும் மருத்துவரும் அரசரும் ஏனையோரும் உறங்க வழிவகுத்துக் கூறுவதைப் பாடுவது.

கலம்பகம் = ஒருபோகும் வெண்பாவும், கலித்துறையும் முதற்கவி உறுப்பாக முன் கூறப்பெற்று, புய வகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் ஆகிய பதினெட்டு உறுப்புக்களுடன் வெண்பா ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா விருத்தம், துறை ஆகிய பாடல்களைப் பெற்று அந்தாதித் தொடையில் அமையப் பெறுவது. தேவர்மீது பாடப்படின் நூறும் அந்தணர்மீது பாடப்படின் தொண்ணூற்றைந்தும், அரசர்மீது பாடப்படின் தொண்ணூறும், வைசியர் மீது பாடப்படின் ஐம்பதும் சூத்திரர்மீது பாடப்படின் முப்பதும் ஆகப் பாடப்படுவதும் (உ-ம்) அருணைக்கலம்பகம், திருவரங்கக்கலம்பகம்.

கா

 
காஞ்சிமாலை = பகைவரது ஊர்க்கு வெளியே இருந்து காஞ்சிமலரைச் சூடித் தாக்குதலைக் கூறுவது.
 
காப்புமாலை = தெய்வம் காப்பதாக என்று மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு, செய்யுகளில் பாடுவது.