பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழமகன் சிறுகாப்பியம்

                   437
              கு

குழமகன் = மாதர்கள் தம் கையில் கண்ட குழமகனை (இளங்குழந்தையை) புகழ்ந்து கலிவெண்பாவால் பாடுவது.

குறத்திப்பாட்டு = தலைவன் பவனிவருதல், மகளிர் கரமுறுதல், மோகினி வரவு, பாங்கிவினாவல், தலைவிகூறல், தென்றல், மதி இவற்றை வெறுத்தல், பாங்கிபழித்தல், தலைவி புகழ்தல், தூது வேண்டல், குறத்திவரல், குறத்தி மலைவளம் கூறல், குறிகூறல், பரிசுதரல், குறவன் வரவு, குறத்தையைக் காமுற்றுத் தேடல், முதலானமற்றும் பல துறைகள் அமைய அகவல் வெண்பா, தரவு, கொச்சகம் கலித்துறை, கழிநெடிலடி விருத்தம் கலிவிருத்தம், முதலியன அமையப் பாடப்படுவது. இது குறம் என்றும் பெயர் பெறும் (உ-ம்)மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி.

             கே

கோசாதிபாதம் = முடி முதல் பாதம் வரையில் உள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவல் பாடப்படுவது.

               கை

கைக்கிளை = ஒரு தலைக்காமத்தினை ஐந்து விருத்தத்தாலேனும் முப்பத்திரண்டு வெண்பாவாலேனும் பாடுவது.

கையறுநிலை = கணவனும் மனைவியும் ஏனையரும் இறந்துபட்டபோது, தாயத்தாரும் விறலியரும் மற்றோரும் துன்புற்று வருந்திச் செயலற்று வருந்தும் நிலையைக் கூறுவது. (உ-ம்)புறத்தில் சில செய்யுட்கள்.

சதகம் = ஒரு பொருளைப் பற்றியோ பல பொருள்களைப்பற்றியோ நூறுசெய்யுட்கள் அமையப் பாடப்பெறுவது. (உ-ம்)குமரேசசதகம், வைராக்கிய சதகம், திருச்சதகம்.

                சி

சிறுகாப்பியம் = பெருங்கப்பியத்தில் கூறப்பட்ட உறுப்புக்களுள் சில குறைந்து, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளினும் ஒன்றிரண்டு