பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்னப்பூ

438

தாரகைமாலை


குறைந்து வரப்பாடப்படுவது, (உ.ம்) சூளாமணி,

சின்னப்பூ = நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய தசாங்கத்தினைச் சிறப்பித்து விரித்து நூறு, தொண்ணூறு, எழுபது ஐம்பது முப்பது என்னும் எண் படப்பாடுவது. (உ-ம் ) தத்துவராயா் பாடிய சின்னப்பூ வெண்பா.

செ

செருக்களவஞ்சி = போர்க்களத்தில் வீரரும், யானையும், குதிரையும் பட்டுக்கிடக்க அவ்வுடலங்களை நாயும், பேயும், கழுகும், காகமும் உண்டு ஆரவாிக்க, பூத பைசாசங்கள் பாடியாடும் சிறப்பைப் பாடுவது. இதனைப் பறந்தலைச் சிறப்புப்பாட்டு என்பர்.

செவியறிவுறுஉ = பெரியோர் தம் அனுபவத்தில் உண்மையெனக் கண்டவற்றை உபதேசமுறையில் மருட் பாவால் பாடுவது.

தசாங்கத்தயல் = அரசனது தாசங்கத்தினை ஆசிரியை விருத்தம் பத்து அமையப் பாடப்படுவது.

தசாங்கப்பத்து = நேரிசை வெண்பாவால் அரசன் படைத்த தாசங்கத்தினைப் பத்துச் செய்யுளால் கூறுவது

தண்டகமாலை = இதுவெண் புணர்ச்சிமாலை என்றும் கூறப்படும். இதுவெண்பா முந்நூறு அமையப் பாடப்படுவது. (உ-ம்)திருவாசகத்தில் உள்ள திருத்தசாங்கம்.

தா

தாண்டகம் = இருபத்தேழ் எழுத்து முதலாக உயர்ந்த எழுத்துக்களையுடைய அடியினைக் கொண்டுவருவது. இல்வாறு வருவதை அளவியல் தாண்டகம் என்பர். எழுத்துக்கள் குறைந்தோ அதிகப்பட்டோ வரும் அடியினைக் கொண்டுவருவதை அளவழித்தாண்டகம் என்பா் (உ.ம்)அப்பர் பாடியுள்ள திருத்தாண்டகங்கள்.

தாரகைமாலை = அருந்ததி போன்ற கற்புடைய