பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்மணிமாலை

440

பரணி



நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது.

நான்மணிமாலை = நான்கு மணிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து மலர்களை இணைத்து மாலையாகக் கட்டுவதுபோல வெண்பா கட்டளைக் கலித்துறை விருத்தம் அகவல் ஆகிய நான்கு பாடல்கள் கொண்டு, அந்தாதித்தொடையில் பாடப்படுவது. (உ-ம்) நால்வா் நான்மணிமாலை, திருவாரூர் நான்மணிமாலை.

நூ

நூற்றந்தாதி = வெண்பா நூறு கொண்டேனும், கட்டளைக் கலித்துறை
நூறு கொண்டேனும், அந்தாதித் தொடை அமையப் பாடப்பட்டு வருவது. அந்தாதி என்பது ஒருபாட்டின் ஈற்றுச் சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்த பாட்டின் முதலாகத் தொடங்கப்பெறுவது (உ-ம்) கந்தரந்தாதி, அற்புதத் திருவந்தாதி.

நொ

நொச்சிமாலை = நொச்சிமலர் குடிப்பகைவர் தம் நாட்டு மதிலைக் கவராதிருக்க அதனைக்காக்கும் சிறப்பைக் கூறுவது.


பாதாதிகேசம் = பாதம் முதல் முடிவரை சிறப்பித்துக் கலிவெண்பாவால் பாடுவது.

பதிகம் = ஒரு பொருளைக் குறித்துப் பத்துப் பாடலால் பாடப்படுவது. (உ-ம்) தேவாரப் பதிகங்கள்.

பதிற்றந்தாதி = பத்துவெண்பாக்களாலேனும், பத்துக் கட்டளைக் கலித்துறைப் பாடல்களாலேனும் அந்தாதித் தொடை அமையப் பாடப்படுவது.

பயோதரப்பத்து = முலையினைக் குறித்துப் பத்துப்பாடல் பாடுவது.

பரணி = போரில் ஆயிரம் யானைகளைக்கொன்று தன் வெற்றியை நிலைநாட்டிய வீரனது புகழ் தோன்ற ஈரடித்தாழிசைகளால் பாடப்படுவது. இதில் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பல வர்ணனை கூளி காளிக்குக் கூறுவதும், காளி கூளிக்குக் கூறுவது, போர்க்கள