பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலசந்தமாலை

441

பிள்ளைத்தமிழ்





வர்ணனையும், காளி கோவில் வர்ணனையும் இராச பாரம்பரியம் தலைவன் சிறப்பு, இயல்பு, வெற்றி முதலியன விளக்கமாகக் கூறப்படும். பாடும் புலவன் மனப்போக்கிற்கேற்ப இந்நூல் தன்னகத்துப் பல பிரிவுகளைக் கொண்டிருக்கும். காளிக்குரிய நட்சத்திரம் பரணி. அந்நட்சத்திரத்தில் பேய்கள் கூழ் சமைத்து அக்காளியை வழிபட்டு உண்டு மகிழும் ஆதலின் பரண் எனப்பட்டது என்றும், இப் பிரபந்தம் பாடும் புலவன் வேலாலும் வாளாலும் அமைந்த பரணி மீது இருந்து பாடுதலின் இப்பெயர் பெற்றது, என்றும் கூறுவர். (உ- ம் ) கலிங்கத்துப் பரணி, தட்சயாக பரணி.

பலசந்தமாலை = பத்துப்பத்துப் பாடல்கள் ஒவ்வொரு சந்தமாக நூறு பாடல்களைக் கொண்டு வருவது.

பவனிக்காதல் = மாதர்கள் கட்டழகன் ஒருவன் தெருவில் உலாவந்த போது காதற்கொண்டு அதனைத் தம் தோழியருடனும், தம்மைச் சார்ந்தவ 56 ருடனும் உரைத்துக் காதலை உணர்த்தும் முறையில் பாடப்படுவது.

பன்மணிமாலை = ஒருபோகும் அம்மானையும், ஊசலும் இன்றி மற்றைய கலம்பகவுறுப்புக்களைப் பெற்றுப் பாடப்படுவது. இதனால் இதனைக் கலம்பகமாலை என்றும் கூறுவர்.

பி

பிள்ளைத்தமிழ் = இது பிள்ளைக்கவி என்றும் பெயர் பெறும். இதன் வகை இரண்டு. ஒன்று ஆண்பால் பிள்ளைத்தமிழ், மற்றொன்று பெண்பால் பிள்ளைத்தமிழ். புலவன் தான் வழிபடும் தெய்வத்தினையோ, அன்றித் தன் மதிப்புக்குரிய பெரியோர்களையோ குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவங்களில் நூறு விருத்தப்பாவால் பாடப்படுவது. ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பத்துப் பருவங்கள், 1. காப்பு, (தெய்வங்க்ள் குழந்தையைக் காக்க வேண்டுமென்று துதித்தல்.இரண்டாம் மாதத்தில் பாடப்படுவது.) 2. செங்கீரை, (செம்மையான சொற்களைப் பேசு-