பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்ச்சிமாலை

443

பெருங்காப்பியம்



தால் செய்யப்பட்ட சிறிய தேரை உருட்டி விளயாடுதல் இது நான்காம் ஆண்டில் நிகழ்வது (உ-ம்) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் மேலே குறிப்பிடப் பட்ட முதல் ஏழு பருவங்களுடன் அம்மனை, நீராடல், ஊசல் என்ற பருவங்களைக் கூட்டிப் பத்தாகக் கொள்ளவேண்டும். அம்மனையாவது அம்மனை என்னும் காய்களைக் கொண்டு மேலே வீசி எறிந்து பிடித்து ஆடும் ஆட்டம், நீராடல் எனபது குளித்து விளையாடுதல், ஊஞ்சல் ஆடுதல் ஊசல். (உ-ம்) மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்.

புகழ்ச்சிமாலை = மாதர்களின் சிறப்பை எடுத்துப் பாடப்படும் முறையில் அமைவது. அகவலடியும் கலியடியும், கலந்துவரும் வஞ்சிப்பாவால் பாடப்படுவது.

புறநிலை = வழிபடு தெய்வம் காப்ப, வழி வழி சிறக்க என வாழ்த்திக் கூறுவது.

புறநிலைவாழ்த்து = வழிபடு தெய்வம் காக்க எனவும், செல்வம் நாளும் நாளும் சிறக்க வாழ்க எனவும், வாழ்த்தி மருட்பாவால் பாடப்படுவது ஒருவெண்பாவாகி வருதலின்றிப் பல உறுப்புக்களோடு தொடர்ந்து ஒருபாட்டாகி முடிவது மருட்பா.

பெ

பெயரின்னிசை = பாட்டுடைத்தலைவன் பெயரினைச் சார இன்னிசை வெண்பாவால் தொண்ணுறேனும், ஏழுபதேனும், ஐம்பதேனும் பாடல்கள் அமையப் பாடப்பெறுவது.

பெயர்நேரிசை = பாட்டுடைத்தலைவன் பெயரினைச் சார இன்னிசை வெண்பாவால் தொண்ணுறேனும், ஏழுபதேனும், ஐம்பதேனும் பாடல்கள் அமையப் பாடப்பெறுவது.

பெருங்காப்பியம் = தெய்வ வணக்கம் செய்யப்படு பொருள் அமைய, அறம் பொருள் , இன்பம் வீடு ஆகிய இவற்றின் பயனை அறிவிப்பனவாய்த் தன்னேர் இல்லாத் தலைவனைக் கொண்டு,போர், முடி சூட்டுவிழா, மகப்பேறு, பல வித வர்ணனைகள் முத