பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதணம்

42

இப்பந்தி


இதணம் = காவல் பரண்
இதண் = காவல் பரண்
இதடி = பெண் எருமை
இதமித்தல் = நன்மை செய்தல், பற்றுச் செய்தல்
இதம் = நன்மை, இனிமை, நெஞ்சம்
இதரம் = தீங்கு, அந்நியம், கீழ்மை
இதலை = கொப்பூழ்
இதழி = கொன்றை மரம்
இதழ் = உதடு, பனை, ஏடு, பூ, இதழ், இமை, மாலை, பாளை
இதன் = நண்பன்
இதாகிதம் = நன்மை, தீமை, இதம் அகிதம்
இதிகாசம் = பழங்கதை, ஐதிகம், உதாரணம், அறிவு
இதை = கப்பல்பாய், புதுக்கொல்லை, புதுப்புனம், கலப்பை, காராமணி
இதோபதேசம் = நற்போதனை, அறவுரை
இதோனி = இவ்விடம்
இத்தி = கல்லாலமரம்
இத்தியாதி = இது முதலானவை
இந்தம் = புளி
இந்தளம் = ஓர் இசை, விளக்குத் தண்டு
இந்தனம் = விறகு, வாசனைப் புகை
இந்திரகோபம் = தம்பலப் பூச்சி
இந்திர சாபம் = வானவில்
இந்திரஞாலம் = வஞ்சகப் பேச்சு, மாயவித்தை
இந்திர திசை = கிழக்கு
இந்திரப் பிரத்தம் = பழைய டில்லி மாநகரம்
இந்திரம் = மேன்மை, ஒரு தீவு
இந்திரன் = அரசன், தேவராசன், கேட்டை
இந்திராட்சி = பார்வதி
இந்திராணி = இந்திரன் மனைவி, நொச்சி
இந்திரி = கிழக்கு
இந்திரிய கோசரம் = புலனுக்கு எட்டியது
இந்திரியம் = சுக்கிலம், பொறி
இந்திரை = இலக்குமி
இத்தீவரம் = கருங் குவளை, கருநெய்தல், நீலோற்பலம்
இந்து = சந்திரன், சிந்துநதி, மிருகசீரிடம், கர்ப்பூரமரம், எட்டி
இந்து காந்தம் = சந்திரன் ஒளிபட நீர் கசியும் கல்
இந்து சேகரன் = சிவன்
இந்துளம் = கடப்ப மரம்
இபம் = யானை, மரக் கொம்பு
இப்பந்தி = துயரம், இக்கட்டு, பேடி, மூடன்