பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாகைமாலை

446

வேனில்மாலை



கொண்டோ அத்தலைமகள் வசிக்கும் ஊர் வழியே வருவதாம். இவ்வாறு மடல் ஊர்ந்து வரும் போது, உடலில் செந்நீர்க்குப்பதிலாக வீரியம் வரக் கண்டால், அங்குள்ளார் அத்தலைமகன் தலைமகள் மிது உண்மையான காதல் கொண்டுள்ளான் என்று அறிந்து அவன் காதலித்த பெண்ணை மண முடித்து வைப்பார்.

வா

வாகைமாலை = பகைவரை வென்று வெற்றி கண்டதை ஆசிரியப்பாவால் பாடுவது.

வரதோரணமஞ்சரி = மத யானையை அடக்கினவனது வீரத்தைப் பற்றியும், எதிர்த்த யானையை அடக்கினவனது வீரத்தைப் பற்றியும், யானையை பற்றிப் பிடித்து வந்த வீரனது வெற்றியைப் பற்றியும் வஞ்சிப்பாவால் பாடுவது.

வாயுறைவாழ்த்து = பயன் தரும் மெய்ப்பொருளை வெண்பா முதலும் ஆசிரியம் பின்னும் அமைந்த மருட்பாவால் பாடப்படுவது.

வி


விளக்குநிலை = வேலோடு விளக்கு ஒன்று பட்டு ஓங்குமாறு பாடுவது.

விருத்தவிலக்கணம் = வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், கொடை இவற்றைத் தனித்தனிப் பக்து விருத்தப்பாவால் பாடுவது. (உ-ம்) திருத்தணிகைக் கந்தப்பையர் பாடிய வேல் விருத்தம்.

வீ

வீரவெட்சிமாலை = சுத்த வீரன் வெட்சிமலர் சூடிப் பகைவர் நாடு புகுந்து பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வந்தபோது அவன்முன் தசாங்கங்களையும் வைத்துப் போற்றி அவன் மீண்டுவந்த் வெற்றியைப் பாடுவது.

வெ

வெற்றிக் கரந்தை மஞ்சரி = பகைவர் கொண்ட பசுக் கூட்டங்களை மீட்க வீரன் கரந்தை மலரைச் சூடிச்சென்று அப்பசுக்கூட்டங்களை மீட்டு வந்ததைப் பாடுவது.

வே

வேனில்மாலை = இளவேனில் முதுவேனில் சிறப்பைப் பாடுவது.