பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசதிக்கோவை

450




களின் விளக்கங்களையும், மக்களது ஒழுகலாற்றையும், காதல் மணம், கற்பு மணங்களைப் பற்றிய செய்திகளையும் உணரலாம்.

அசதிக் கோவை = இது ஒளவை மூதாட்டியாரால் எழுதப்பட்டது. ஒளவைப் பிராட்டியார் ஒரு காட்டு வழியே போய்க் கொண்டிருக்கையில் களைப்பு மேலிட, அதுபோது, அங்கு ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடையன் இவ்வம்மையார்ருக்குத் தான் வைத்திருந்த கூழைக் கொடுத்துப் பருகுமாறு செய்தான். அந்நன்றியைப் பாராட்டிப்பாட ஔவையா் அவனது பெயரைக் கேட்டனர். அவனுக்குத் தன் பெயர் நினைவுவரவில்லை. அவன் அசதி என்று கூறிவிட்டான். அசதி என்ற பெயரையே பெயராகக் கொண்டு, அசதிக்கோவை என்னும் இந்நூலைப் பாடினர். ஒளவையார் பலர் ஆதலின் எவ்வவ்வையார் இதனைப் பாடினர் எனத் திட்டமாகக் கூறுவதற்கு இன்மையின் காலமும் குறிப்பிடற்கு இல்லை.

அஞ்ஞான வதைப் பரணி = இதன் ஆசிரியர் தத்துவராயசுவாமிகள். இது ஒரு வேதாந்த நூல். பரணி நூல் போர்களத்தையும் அப்போர்களத்தில் வெற்றி பெற்றவர்களையும் வர்ணிப்பது. இங்கு அஞ்ஞானத்தை அரசனாக்கி அகங்கார முதலியவற்றை நால் வகைப் படைகளாக்கி அவற்றை ஞானமாகிய வாள் அழிப்பதாக உருவகப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சொருபானந்தர் சிறப்பையும் கீர்த்தியையும் நன்கு உணரலாம். காலம் கி்.பி. 15-ஆம் நூற்றாண்டு.

அடங்கன்முறை = சம்பந்தர், அப்பர், சுந்தார், பாடிய தேவராங்கள் ஆகிய முதல் ஏழு திருமுறைகள் அடங்கிய நூல். முதல் மூன்று திருமுறைகள் சம்பந்தருடையவை. நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள், திருநாவுக்கரசருடையவை, ஏழாம் திருமுறை சுந்தர ருடையது. இம்முறைப்படி தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகள். ஆகவே, இது தொகுக்கப் பட்ட காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு.