பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அற்புதத் திருவந்தாதி

454

ஆத்திச்சூடி



முடிதலின், இப்பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் அம்பலவாணக் கவிராயர். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு. இது நீதி நூல். ஆதலின், மக்கள் மேற்கொண்டு ஒழுகவேண்டிய நீதிகள் பலவற்றை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

அற்புதத் திருவந்தாதி = இது காரைக்கால் அம்மையாரால் சிவபெருமான் மீது பாடப்பட்ட தோத்திர நூல். முற்றிலும் வெண்பாவால் ஆனது. பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டது. காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு. அம்மையார் இறைவனைப் பேய் வடிவு வேண்டுமெனக் கேட்டு, அவ்வாறே பெற்று, அதன்பின் இந்நூலைப் பாடியுள்ளார்.

அனுமார் பிள்ளைத்தமிழ் = ராம தூதனான அனுமார் மீது அருணாசலக் கவிராயர் பாடியுள்ள பிரபந்தம். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.

ஆசாரக் கோவை = மக்கள் ஒழுக்க முறைகளைக் கோவைப்படுத்திக் கூறும் நீதி நூல். பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று. இந்நூலாசிரியார் பெருவாயின் முள்ளியார். நீராடல், உண்ணல், துயிலல், வழிபடல் முதலானவைகள் எம்முறையில் செய்தல் வேண்டும் என்பனவற்றை விளக்கமாக இந்நூலில் காணலாம். காலம் கடைச்சங்க காலம்.

ஆசிரிய நிகண்டு = சொற்களுக்குரிய பொருளை அறிய ஆசிரியப்பாவால் பாடப்பட்ட நூல். ஆசிரியர் ஆண்டிப் புலவர். காலம் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு.

ஆண்டவர் பிள்ளைத்தமிழ் = இந்நூல் மொய்தீன் ஆண்டவர் மீது பாடப்பட்ட முஸ்லீம் சமயநூல். சவ்வாது புலவரால் இயற்றப்பட்டது. காலம் 17 ஆம் நூற்றாண்டு.

ஆத்திசூடி = ஒளவையாரால் பாடப்பட்டது. அருமையான நீதிகளைச் சிறு சிறு வாக்கியங்களில் கூறும் நீதிநூல். இளமையில் இளைஞர்கள் உள்ளத்தில் பதியுமாறு செய்யப்பட்டது. இது சங்க கால ஒளவையாரால் பாடப்பட்டதோ, அன்றிப்