பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆத்திசூடி வெண்பா

455

இயற்பா


  
பிற்பட்ட காலத்து ஔவையாரால் பாடப்பட்டதோ என்பதை உறுதியாகக் கூறுதற்கின்மையின், காலமும் உறுதியாகக் குறிப்பிட இயலவில்லை. ஆத்திசூடி என்று முதற்கண் அமைந்த செய்யுள் பாடப்பட்டிருத்தலால் இப்பெயர் பெற்றது.

ஆத்திசூடி வெண்பா = இது வெண்பாவால் இயன்ற நூல். ஒவ்வொரு வெண்பாவிலும் ஆத்திசூடியின் வாக்கியங்கள் அமைந்து காணப்படும். அவ்வாக்கியத்தின் கருத்துக்கு ஏற்ற உதாரணக் கதைக் குறிப்புக்களையும் கொண்டு திகழ்வது. இராமபாரதி என்ற புலவரால் பாடப் பட்டது. காலம் கிபி. 19 ஆம் நூற்றாண்டு.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் = இது ஓர் உரை நூல். இந்நூலாசிரியர் கனகசபைப் பிள்ளையாவார். இந்நூலால் புலவர்களின் பெருமையும், தமிழ் நூல்களின் பரப்பும், தமிழ் நாட்டின் பெருமையும் பலர் அறிய நேர்ந்தது. முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மெட்ராஸ் ரெவ்யூ என்னும் பத்திரிகையில் பல கட்டுரைகளாக வெளி வந்தது. காலம் 19-ஆம் நூற்றாண்டு.

ஆழ்வார்கள் காலம் = இது மு. ராகவையங்காரால் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல். இந்நூலில் ஆழ்வார்கள் திகழ்ந்த காலத்தை அறிந்து கொள்ளலாம். காலம் கி.பி.20-ஆம் நூற்றாண்டு.



இசை நுணுக்கம் = இது முத்தமிழ் இலக்கண நூல்களுள் இசைத்தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் சிகண்டி என்பவர். அடியார்க்கு நல்லாரால் மேற்கோள் காட்டப்பட்டிருத்தலின் அவர் காலத்துக்கு முற்பட்ட நூலாகத் தெரிகிறது. அடியார்க்கு நல்லார் காலம் கிபி.13-ஆம் நூற்றாண்டு. ஆகவே, இசை நுணுக்கம் அதற்கு முற்பட்டது என்று மட்டும் அறிதல் வேண்டும்.

இயற்பா = இது வைணவ சமயத் தோத்திர நூலான நாலாயிரப் பிர