பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரட்சணிய யாத்ரீகம்

456

இரண்டாம் திருவந்தாதி


  
பந்தத்தில் ஒரு பிரிவு. இதில் பொய்கையார் பாடிய முதல் திருவந்தாதி நூறு பாடல்களும், பூதத்தார் பாடிய இரண்டாம் திருவந்தாதி நூறு பாடல்களும், பேயார் பாடிய மூன்றாம் திருவந்தாதி நூறு பாடல்களும், திருமழிசைப் பிரான் பாடிய நான்முகன் திருவந்தாதி தொண்ணூற்றாறு பாடல்களும், நம்மாழ்வார் பாடிய திருவிருத்தம் நூறு பாடல்களும், திருவாசிரியம் ஒன்றும், பெரிய திருவந்தாதி
எண்பத்தேழு பாடல்களும், திருமங்கையாழ்வார் பாடிய திருஎழுகூற்றிருக்கையும், சிறிய திருமடல் எழுபத்தேழு பாடல்களும், பெரிய திருமடல் நூற்று நாற்பத்தெட்டுப் பாடல்களும் அடங்கிய தொகுப்பு நூல். இது வெவ்வேறு காலத்து ஆழ்வார்கள் பாடிய தொகுப்பு நூல் ஆதலின் காலம் குறித்தற்கு இல்லை.

இரட்சணிய யாத்ரீகம் = இது ஆங்கிலத்தில் உள்ள பில்கிரிம்ஸ்ப்ராக்ரஸ் என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. கிறிஸ்துவச் சமய நூல். ஆசிரியர்
கிருஷ்ணப்பிள்ளை. கிறிஸ்தவ விவிலிய நூல் கருத்துக்கள் இதில் அமைந்துள்ளன. வீணான வருணனைகள் அற்றது. எளிய நடையில் உள்ளது. வடமொழிகளைப் பெரிதும் உபயோகிக்கப்பட்ட நூல். நாற்பத்தேழு காண்டங்களையும் நாலாயிரம் பாடல்களையும் உடையது. காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.

இரண்டாம் திருவந்தாதி = இது நாலாயிரப் பிரபந்தத்தில் இயற்பா என்ற பிரிவில் இரண்டாவதாக உள்ளது. 100 பாடல்களைக் கொண்டது. திருமால் புகழைப் புகழ்வது. பூதத்தாழ்வாரால் பாடப்பட்டது. முற்றிலும் வெண்பாவால் ஆனது. பொய்கையார் பாடிய முதல் திருவந்தாதிக்குப் பின்னர் இது அமைந்திருத்தலின், இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரைப் பெற்றது. இதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடை கொடுக்கப்பட்டது. காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.