பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கிய வரலாறு

459

இறையனார் அகப்பொருள்


இது தொல்காப்பியம், நன்னூல், தண்டி அலங்காரம், அகப்பொருள், வெண்பாமாலை முதலானவற்றிலிருந்து பல இலக்கணப்பகுதிகளைத் தழுவி நூலாசிரியர் எழுதிய சூத்திரங்களுடன் விளங்குவது. இது ஐந்து இலக்கணங்களைக் கூறுவதாயினும், எழுத்து, சொல், பொருள் என்ற முப்பிரிவினைக் கொண்டு விளங்குவது. பொருளதிகாரத்தில் அணி, இலக்கணம், யாப்பிலக்கணம், பாட்டியல் பகுதிகள் அடங்கியுள்ளன. இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். ஆகவே, இவ்விலக்கண நூல் புதுமையும் பழமையும் கலந்த இலக்கண நூல். இதன் ஆசிரியர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர் 17-ஆம் நாற்றாண்டு.

இலக்கிய வரலாறு = இது ஒரு சிறந்த உரைநடை நூல். இதில் ஆசிரியர் வரலாற்றையும், தமிழ் வரலாற்றையும் காணலாம். நூல்களின் வரலாற்றையும் 20-ஆம் நூற்றாண்டு வரை உள்ள புலவர்களைப் பற்றிய குறிப்பையும் காணலாம். தமிழ்நாட்டின் தொன்மை, பெருமைகளை அறிதற்குத் துணை செய்யும் நூல். இதன் ஆசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ. எம்.எல், காலம் 20-ஆம் நூற்றாண்டு. இது ஆறு அதிகாரங்களை உடையது.

இளம்பூரணம் = இளம்பூரணரால் எழுதப்பட்ட உரை நூல். இளம்பூரணம் எனத் தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட முதல் உரை நூலாகிய இதனையே கூறுவர். இவ்வுரையாசிரியர் தாம் உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர். காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு.

இறையனார் அகப்பொருள் = தமிழ் மக்களின் இன்ப வாழ்வு பற்றிக் கூறுவது அகப்பொருளாகும். பாண்டிய நாட்டில் பன்னிரண்டு யாண்டுகள் பஞ்சம் துன்புறுத்தியதால், மக்கள் பல இடங்களுக்குச் சென்றனர். அப்படிச் சென்றவர்களுள் புலவர்களும் அடங்குவர். மீண்டும் நாடு செழிப்புற்றபோது சென்றவர்கள் மீண்டனர். அப்படி மீண்ட புல