பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உதயணகுமார காவியம்

463

உறையூர்ப் புராணம்





ராகிய மெய்கண்ட சிவாச்சாரியாரை முன்னிலையாக்கிச் சித்தாந்தம் கூறும் தத்துவ ரூபம் முதலியவற்றைத் தெளிவுற எடுத்து விளக்கியுள்ளார். பாயிரம் உட்பட ஐம்பத்தைந்து வெண்பாக்களையுடையது. 12-ஆம் நூற்றாண்டு.

உதயணகுமார காவியம் = இது உதயணன் காதை என்றும் கூறப்படும். வச்ச தேசத்து மன்னனான உதயணனது வரலாற்றைக் கூறும் நூல். 367 பாடல்களைக் கொண்டது. கி.பி. பதினோறாம் நூற்றாண்டு.

உத்தரகோச மங்கை புராணம் = இது மாசிலாமணி தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் மாசிலாமணிச் சம்பந்தர் என்றும் கூறப்படுவர். இத்தலம் மாணிக்க வாசகரால் பாடப்பட்டது. கி. பி. 16 - ஆம் நூற்றாண்டு.

உபதேசகாண்டம் = ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட உத்தரகாண்டம் எப்படிக் கம்ப ராமாயணத்தோடு இயைந்துக் கூறப்பட்டு வருகின்றதோ, அதுபோலக் கந்தபுராணத்தோடு ஏழாவது கண்டமாக இணைத்துக் கூறப்படும் நூல். இது கோனேரியப்ப முதலியாரால் இயற்றப்பட்டது. இது 41சருக்கங்களையும் 4360 பாடல் களையும் கொண்டது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இதில் சைவ மக்கள் அறிந்து ஒழுக வேண்டிய பலசெய்திகள் கூறப் பட்டுள்ளன.

உரிச்சொல் நிகண்டு = காங்கேயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது 12-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூளாமணி நிகண்டிற்கு முன்னர் எழுந்த நூல். உரிச் சொல்லுக்குரிய பொருள்களை எடுத்துக் கூறும் நூல்.

உறையூர்ப்புராணம் = இதுவே மூக்கிச்சுரம் எனப்படும். சோழனது யானையை இவ்வூர்ச் சேவல் வென்ற காரணத்தால் இது கோழியூர் என்றும் கூறப்படும். இந்த வரலாறும் இந்நூலில் உண்டு. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் எழுதப்பட்டது. கி.பி. 19 - ஆம் நூற்றாண்டு.