பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயமானன்

44

இரசிதம்


இயமானன் = உயிர், யஜமானன், யாகம் செய்விப்போன்
இயம் = ஒலி, வாத்தியம் , சொல், மத்தளம்
இயம்பல் = சொல்லுதல், ஒலித்தல், துதித்தல்
இயலல் = அசைதல், நடத்தல், உடன்படுதல், கூடுதல், பொருந்துதல்
இயல் = இயற்கை, இலக்கணம், குணம், சாயல், முறைமை, நூற்பகுதி, இயற்றமிழ், ஒப்பு, தகுதி, இயல்பு, மென்மை, உழுவலன்பு, செலவு, உரிமை, மாறுபாடு
இயல்பு = ஒழுக்கம், குணம், சுபாவம், தகுதி, முறைமை, வரலாறு, நற்குணம, நேர்மை
இயல்மகன் = கலைமகன்
இயவன் = கீழ்மகன், தோற்கருவியாளன்
இயவு = காடு, வழி,போதல்
இயவுள் = கடவுள், தலைவன், மிகு புகழாளன், வழி
இயவை = வழி, ஒரு சிற்றளவு, காடு, மூங்கிலரிசி
இயறல் = இயலுதல்
இயற்கை = இலக்கணம், சுபாவம், நிலமை, கொள்கை
இயற்சொல் = வழக்கச் சொல்
இயூகம் = கருங்குரங்கு
இயற்றி = முயற்சி, சத்தி
இயைதல் = பொருந்துதல்
இயைபு = பொருத்தம், சம்பந்தம், புணர்ச்சி
இர = யாசித்தல்
இரகிதம் = நீங்கியிருத்தல், விடுதல்
இரகுநாதன் = ராமன்
இரக்கம் = ஒலி, துன்பம், மனவுருக்கம், கிருபை
இரக்கை = யாசித்தல்,காப்பு, திருநூறு, ஒலி
இரங்கல் = அழுதல், வருந்துதல், உருகல், ஒலித்தல், அருள் செய்தல்
இரசகன் = வண்ணான்
இரசகுளிகை = இரும்பைப் பொன்னாக்கும் மருந்து, செம்பின் களிம்பை மாற்றும் பொருள்
இரசதம் = வெள்ளி
இரசநி = மஞ்சள்
இரசம் = சுக்கிலம், நீர், விஷம், சுவை, சாறு, இன்பம்
இரசவாதம் = தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கல்
இரசிதம் = வெள்ளி