பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரந்தாதி

468

கந்தரனுபூதி


4. யுத்த காண்டம், 5.தேவகாண்டம், 6. தட்சகாண்டம் என்ற ஆறு காண்டங்களைக் கொண்டது. இதில் 10346 செய்யுட்கள் உண்டு. கந்தப் பெருமானது வரலாற்றை அறிவிக்கும் பரந்த நூல். இது சைவ சமயச் சிறப்பினையும் சிவபரத்துவத்தையும் பல நீதிகளையும் கொண்டு திகழ்வது. காம லீலைகளைப் பற்றிய சில குறிப்புக்களும் இதில் உள்ளன. இதன் நடையும் சுவையும் கதலி பாகம் போன்றது. காலம் கி.பி. 12- ஆம் நூற்றாண்டு. கச்சியப்ப சிவாசாரியார் தினம் தினம் பாடல்களைப் பாடிக் குமரப் பெருமான் திருவடிகளில் வைத்துத் திருக்கோயிலைத் தாளிட்டுச் சென்று மறுநாள் கோவிலைத்திறந்து அப்பாடல்களைப் பார்க்கும் போது அப்பாடல்கள் முருகப் பெருமானால் திருத்தப் பட்டிருக்கும் என்று கூறப்படுவதால் இந்நூலின் பெருமையினை மேலும் கூறவேண்டா அன்றே?

கந்தரத்தாதி = இந்நூல் வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கும், அருணகிரிநாதருக்கும் கல்வி சம்பந்தமான வாதம் நடந்தபோது அருணகிரிநாதரால் பாடப்பட்டநூல் என்பர். இதில் உளள பாடல்கள் மடக்கு என்னும் அணியால் அமைந்தவை. இவற்றிற்கு வில்லிபுத்தூரார் உரை கூறிக்கொண்டு வந்தும் 'திதத்தத்த’ என்று தொடங்கும் திருப்பாடற்குப் பொருள் கூற இயலாது விழித்தனர் என்பர். இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. இதில் 100 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குரிய உரை வில்லிபுத்துாராருடையது என்பது ஆன்றோர் துணிபு.

கந்தரலங்காரம் = அருணகிரிநாதரால் பாடப்பட்டது. காலம் கி. பி. 15-ஆம் நூற்றாண்டு. முருகனது பெருமை, வேலின்மாண்பு, மயிலின் சிறப்பு முதலியன இதில் பாடப்பட்டுள்ளன. செந்தமிழால் தன்னை வைதவர்களையும் முருகன் வாழ வைப்பான் என்னும் குறிப்பு இந்நூலில் தான் உண்டு. முருகன் திருவருளைப் பெறுதற்கு இது உகந்த நூல்.

கந்தரனுபூதி = இது அருணகிரிநாதரால் பாடப்பட்டது. 51 பாடல்களையுடை