பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கப்பற்கோவை

470

கம்பராமாயணம்



என இது தூண்டுகிறது. காலத்தினைத் திட்டமாகக் கூறுதற்கு இல்லை.

கப்பற் கோவை = புதுக்கோட்டைக் கப்பலூர் என்னும் ஊரின் தலைவனான கருமாணிக்கன் என்பவன் மீது பாடப்பட்ட அகப்பொருட் சுவை அமைந்த நூல். இந் நூலாசிரியர் பெயர் தெரிந்திலது. இந்நூலில் உள்ள பாடல்களில் சில இலக்கண விளக்க உரையில் உதாரணமாக எடுத்தாளப் பட்டுள்ளன.

கம்ப ராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி = இது ஒரு வசன நூல். காஞ்சிபுரவாசிகள் சிவஞான முனிவரிடம் கம்பராமாயணக் கவிகளின் சிரேஷ்டத்தைச் சிறப்பித்துப் பேசினர். அது கேட்ட சிவஞான முனிவர் அவர்களின் கொட்டத்தை அடக்கக் கம்பராமாயணத்திலுள்ள 'நாடிய பொருள் கைகூடும்' என்னும் செய்யுட்கு உரை கூறப்புகுந்து, அச்செய்யுளில் அமைந்த பொருள் முற்றிலும் தவறானது என எடுத்துக் காட்டியுள்ளார். பின்னர்க் கம்பராமாயண அன்பர்கள் தாம் கம்பராமாயணக் கவியினைச் சிறப்பித்துக் கூறியது தவறு என்று கூறி மன்னிக்குமாறு சிவஞான முனிவரை வேண்டினர். அதன்பின் அவரே அச்செய்யுளுக்கே சிறப்புடைய பொருள் உண்டு என்பதையும் இந்நூலில் எடுத்துக்காட்டி இனியாகிலும் அவ்வாறு கம்ராமாயணக் கவி தான் சிறப்புடையது என்று கூறாதிருக்க அறிவு கொளுத்தினார். இத்தகைய சந்தர்ப்பத்தில் எழுதப்பட்ட நூலே இது. இதன் காலம் கி. பி. 18- ஆம் நூற்றாண்டு.

கம்பராமாயணம் = கம்பரால் பாடப்பட்ட நூல். ராமனது வரலாற்றை அறிவிப்பது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களை யுடையது, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கவிகளையுடையது. இராமாவதாரம் என்னும் பெயரும் இந் நூலுக்கு உண்டு. காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு. இது கற்றோர் இதயத்தைக் களிக்கச்