பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கயாகரர் நிகண்டு

471

கலிங்கத்துப்பரணி


செய்யும் நூல். இந்நூலில் நாலாயிர பிரந்தக் கருத்துக்கள், சைவத் திருமுறை கருத்துக்கள், பஞ்ச காவிய கருத்துக்கள், திருக்குறட் கருத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் இந்நூால் கற்றவர்க்குச் சுவை தருகிறது. அது அதில் ஓர் அகப்பை முகந்து கெண்டேன் என்று கம்பரே கூறியுள்ளார்.

கயாகரர் நிகண்டு = இது பழைய நிகண்டுகளில் ஒன்று. நிகண்டு என்பது சொற்களுக்குப் பொருள் உணர்த்தும் நூல். இது இக்காலத்திலுள்ள அகராதி போன்றது. ஆனால் இது செய்யுள் அமைப்பில் பொருளை அறிவிக்கும் முறையில் அமைந்தது. கயாகரரால் இயற்றப்பட்டது. காலம் தெரிந்திலது.

கயிலைபாதி காளத்திபாதி வெண்பா = இது நக்கீரரால் பாடப்பட்டது. நக்கீரர் இறைவனோடு வாதம் இட்டுக் குட்ட நோய் கொண்டு அது தீரக் கயிலைக்குச் சென்றபோது இடையில் திருக்காளத்தி மலையில் தங்கி, இந்நூலைப் பாடினார். இது சைவத் திருமுறை 12 இல் 11-ஆம் திரு முறையில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் காலம் கடைச் சங்க காலம். ஆனால் இதில் கருத்து வேறுபாடு உண்டு. அதாவது இந்நூல் சங்கக் கால நக்கீரரால் எழுதப்பட்டதன்று என்பது.

கருணீகர் புராணம் = கணக்கர் மரபினர்களின் பூர்வ வரலாற்றை உணர்த்தும் நூல். இதனை அங்குசாமிப்பிள்ளை என்பார் பாடியுள்ளார். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.

கலிங்கத்துபரணி = இது சயங்கொண்டார் என்பவரால் பாடப்பட்டது. பரணி என்பது போரில் 1000 யானைகளைக் கொன்ற வீரனைப் பற்றிப் பாடப்படும் நூல். முதற் குலோத்துங்கன் கலிங்கத்தை வென்ற வெற்றிச் சிறப்பைக் கூறும் நூல். இதில் பதின்முன்று பகுதிகள் உள்ளன. உண்மையில் படை திரட்டிச் சென்று போர் செய்து வெற்றி கண்டவன் கருணாகரத் தொண்டைமான் என்னும் வீரனான முதல் அமைச்சனாவான். மந்திரியின் வெற்றியினை மன்னன் வெற்றியாக இந்

  1. T L- 1 J