பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காசி ரகசியம்

475

காவேரி புராணம்


ஆம் நூற்றாண்டு. இது தோத்திர நூல்.

காசி ரகசியம் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் பாடப்பட்டது. காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. சிதம்பர ரகசியம் போல் காசி ரகசியம் அறிய இந்நூல் துணை செய்யும்.

காஞ்சி புராணம் = இதன் முற்பகுதி சிவஞான முனிவராலும் பிற்பகுதி அவர் மாணவர் கச்சியப்ப முனிவராலும் பாடப்பட்டது. இந்நூலில் பல சித்திரக் கவிகள் அமைந்துள்ளன. இந்நூலால் தொண்டை நாட்டுச் சிறப்பினை நன்கு தெளியலாம். திணை மயக்கச் செய்யுட்களின் பொருட் செறிவும், ஐந்திணை வளங்களைப்பற்றிய செய்யுட்களின் பொருட் சிறப்பும், சுவை மிகவுடையனவாகக் காணப்படும். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு. காஞ்சிபுரத்தின் மாண்பை அறிய இது துணை புரியும் நூலாகும்.

காரெட்டு = மேகத்தைப் பற்றிய எட்டுப் பாடல்களைக் கொண்ட நூல். இது பதினோராம் திரு முறையில் இணைக்கப் பட்டுள்ளது. பாடியவர் நக்கீரர். கடைச்சங்க காலம் என்பர்.

கார் நாற்பது = பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. முல்லைத் திணைக்குரிய இருத்தல் என்னும் உரிப்பொருள் அமையப் பாடப்பட்ட நூல். இதில் கார்கால வர்ணனை அழகுறப் பாடப்பட்டுள்ளது. நாற்பது பாடல்களைக் கொண்டது. இதனை மதுரைக் கண்ணங்கூத்தனார் என்பவர் இயற்றினார். காலம் கடைச் சங்க காலம்.

காவடிச்சிந்து = நல்ல இசையோடு கூடிய பாடல்களைக் கொண்ட நூல். முருகப்பெருமான் மீது பாடப்பட்டது. இதனைப் பாடியவர் அண்ணாமலை செட்டியார். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு. இவரே அல்லாமல் துர்க்கை முத்துப் பிள்ளை என்பாரும் இவருக்குப்பின் ஒரு காவடிச்சிந்தைப் பாடியுள்ளார். ஆனால் செட்டியார் சிந்துக்குள்ள பெருமையினைப் புலவர் சிந்து பெறவில்லை. பூ என்பது எப்படித் தாமரையைக் குறிக்குமோ, அதுபோலக் காவடிச்சிந்து என்றால் செட்டியார் பாடலையே குறிக்கும்.

காவேரி புராணம் = திருச்சிற்றம்பல முனிவரால் பாடப்பட்டது. இதில்