பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரசுவம்

45

இரமணீயம்


இரசுவம் = அற்பம்
இரச்சு = கயிறு, முடிச்சு
இரஞ்சகம் = பிரியம்
இரஞ்சிதம் = இன்பம், பிரியம்
இரட்சகன் = மீட்பவன்
இரட்சனை = காத்தல்
இரட்சண்ணியம் = காத்தல்
இரட்சாபந்தனம் = காப்புக் கட்டல்
இரட்சை = காவல்
இரட்டர் = வைசியர்
இரட்டல் = ஒலித்தல், அசைதல், இரட்டுதல்
இரட்டு = ஒலி, இரட்டை
இரட்டுறமொழிதல் = இருபொருள் தோன்றக் கூறுதல்
இரட்டைக்கிளவி = ஒரே சொல் இருமுறை வந்து பொருள் விளங்கச் செய்தல், (கடகட)
இரட்டையர் = நொண்டிப் புலவரும் குருட்டுப் புலவருமாக விளங்கிய முது சூரியர், இளஞ் சூரியர்களான இரு புலவர்கள்
இரணகளம் = போர்க்களம்
இரண கெம்பீரம் = போரில் பேர் ஆரவாரம்
இரணசூரன் = போர் வீரன்
இரண பாதகன் = கொலைப்பாதகன்
இரணம் = போர், கடன், புண், பொன், உப்பு
இரணரங்கம் = போர்க்களம்
இரணியகருப்பன் = பிரமன்
இரணியம் = பொன்
இரதம் = நீர், சுவை, இரசம், தேர், இனிமை, மாமரம், புணர்ச்சி, பல், சாறு
இரதி = காமம், பித்தளை, புணர்ச்சி, ஆசை, மிகுதி, மன்மதன் மனைவி, பெண் யானை, காந்தள்
இரதித்தல் = விரும்புதல், தித்தித்தல்
இரத்தல் = யாசித்தல், வேண்டுதல்
இரத்தாசயம் = உடலில் இரத்தம் தங்குமிடம்
இரத்தி = இலங்தை மரம்
இரத்தினகசிதம் = இரத்தினம் பதிக்கப்பட்டது
இரத்தினாகரம் = கடல், இரத்தின சுரங்கம்
இரத்தோற்பலம் = செங்குவளை
இரந்திரம் = குழி, நிந்தை, துவாரம், வெளி
இரப்பு = வறுமை, யாசகம்
இரமணன் = நாயகன், தலைவன்
இரமணீயம் = இரம்மியமானது, அழகுடையது, இன்பம் செய்வது