பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கும்பகோணப் புராணம்

478

குறிஞ்சிப் பாட்டு


  
துறவு என்னும் நூலே பலராலும் படிக்கப்படுவது. இவற்றின் ஆசிரியர் குமாரதேவர் ஆவார். காலம் 18 ஆம் நூற்றாண்டு.

கும்பகோணப் புராணம் = ஒப்பிலாமணிப் புலவர் இதன் ஆசிரியர். கிபி 18 ஆம் நூற்றாண்டு. மகாமக தீர்த்த விசேடத்தை அறியலாம்.
 
குருபரம்பரை = பின்பு அழகிய பெருமான் சீயர் இதன் ஆசிரியர். வைஷ்ணவப் பெருமக்களின் வரலாறு கூறும் நூல். காலம் கி. பி. 15 ஆம் நூற்றாண்டு.

குருபூசை மான்மியம் = சைவ சமயப் பெரியோர்கள் இறைவன் திருவடியடைந்த நாளே குருபூசை தினம் எனப்படும். அந்நாளில் அவர்களை நினைந்து வழிபடலும், அடியார்களுக்கு அன்னம் இடலும் குருபூசை நாளில் செய்ய வேண்டிய செயல்களாகும். இப்படிச் செய்வதனால் ஏற்படும் பயனையும் பெருமையையும் கூறுவதே இந்நூல். இந் நூலாசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.
 
குலால புராணம் = மச்சமுனி என்பவரால் பாடப்பட்டது. மட்பாண்ட வகுப்பினர் மாண்பைக் கூறுவது. காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டு.

குலோத்துங்க சோழன் கோவை
குலோத்துங்கன் உலா
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் = ஒட்டக் கூத்தரால் பாடப்பட்டது. காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டு.

குறிஞ்சிப் பாட்டு = சங்கம் மருவிய பத்துப் பாட்டு என்னும் தொகை நூல்களுள் ஒன்று. இதனைப் பெரிய குறிஞ்சி என்றும் கூறுவர். வடமொழி உணர்ந்த வடநாட்டு மன்னன் பிருகதத்தன் தமிழ்மொழியின் சுவையை உணரக் கபிலரால் பாடப்பட்ட நூல். இதனால், பல வகை மலர்களின் பெயரை அறியலாம். 261 அடிகளைக்கொண்ட ஆசிரியப் பாவால் ஆனது. இது கடைச்சங்க காலத்தது. மாலைக் காலத்தில் பறவைகளும் விலங்குகளும் தம் தம் இருப்பிடம் வந்து சேரும் நிகழ்ச்சிகளையும் அப்போது மக்கள் செய்யும் செயல்களையும்