பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறுந்திரட்டு

479

குறுந்தொகை


  
படிக்கும் போது இன்பம் ஊட்டுவனவாகக் காணப்படும். இதில் 99 வகை மலர்களின் பெயர்களைக் காணலாம்.
 
குறுந்திரட்டு = இது ஒரு தொகுப்பு நூல். இதனைத் திரட்டியவர் தத்துவராய சுவாமிகள். திரட்டிய காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு. இதில் உள்ள பாடல்கள் வேதாந்த பரமான கருத்துக்களைக் கொண்டது. சிதம்பர சுவாமிகள் தாம் எழுதிய உரைகளில் பெரிதும் இந்நூலில் உள்ள பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
 
குறுந்தொகை = சங்கம் மருவிய எட்டுத்தொகை நூற்களில் ஒன்று. இதில் 400 பாடல்கள் உண்டு. இது அகப்பொருட் சுவையினைத் தழுவியது. இந் நூலில் 205 புலவர்கள் பாடிய பாடல்கள் உள்ளன. அனைத்தும் அகவற் பாவால் இயன்றவை. கடவுள் வாழ்த்துப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இது பூரிக்கோ என்பவனது வேண்டுகோளால் தொகுக்கப்பட்டது. இந்நூலிற்குப் பேராசிரியர் உரை உண்டு என்பர். அவ்வுரை யுள்ளும் 20 பாடல்கட்கே அவர் உரை எழுதினர் என்பர். அவ்விருபது செய்யுட்களுக்குப் பின்னர் நச்சினார்க்கினியர் உரை எழுதினர் என்பர். இவ்வுரைகள் இது போது கிடைத்தில. ஆகவே, டாக்டர் சுவாமிநாத ஐயர் இதற்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். சௌரிப்பெருமாள் அரங்கசாமி ஐயங்காரும் இதற்கு உரை எழுதியுள்ளார். கலா நிலையம் என்னும் பத்திரிகையில் இராமரத்தின ஐயர் என்பவரும் உரை எழுதி முடித்துள்ளார். இந்நூல் கடைச்சங்க காலத்தது. நாலடி சிறுமையும் எட்டடி பெருமையும் கொண்ட பாடல்களைப் பெற்றது. அதனால்தான் இது குறுந்தொகை எனப்பட்டது. இதில் தருமி என்பவனுக்குச் சிவபெருமான் பாடித்தந்த “கொங்கு தேர்" என்று தொடங்கும் பாடலும் உள்ளது. இயற்கையின் வினோதங்களை அறியப் பெருந்துணை செய்யும் நூல் இது.