பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் புராணம்

483

சங்கரசோழன் உலா


  
கோயில் புராணம் = சிதம்பரத்தைப் பற்றிய புராணம். கொற்றவங்குடி உமாபதி சிவாசாரியரால் பாடப்பட்டது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டு. நடனச் சிறப்பு. சிதம்பர மான்மியம் முதலானவற்றை அறிய இது துணை செய்யும்.

கோயில் திருப்பண்ணியர் விருத்தம் = சிதம்பர நடராஜர் மீது பாடப்பட்ட நூல். ஆசிரியர் நம்பியாண்டார் நம்பிகள். காலம் கிபி. 11-ஆம் நூற்றாண்டு. 11-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்ட நூற்களுள் ஒன்று. இது தோத்திர நூல்.

கோபப் பிரசாதம் = நக்கீரர் சொக்கலிங்கப் பெருமானுடன் வாதாடிய காரணத்தால் குட்டநோய் பெற்றபோது இறைவனுக்கு எழுந்த கோபம் தணிய இது பாடப்பட்ட நூல். ஆசிரியர் நக்கீரர். 11-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்ட நூற்களுள் ஒன்று. சிவபெருமானது வீரச்செயல்களும், அவர் அன்பர்கட்குச் செய்த அருட்செயலும் இதில் பாடப்பட்டுள்ளன.

கோவிந்த சதகம் = இதனை நாராயணபாரதி என்பார் பாடினர். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு. இது நீதிநூல்.



சங்க இலக்கியம் = இது ஒரு தொகுப்பு நூல். சங்க நூற்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பதிப்பித்து வெளியிடப்பட்ட நூல். இதனைச் சைவசித்தாந்த சமாஜத்தார் வெளியிட்டனர். காலம் 20-ஆம் நூற்றாண்டு.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும் = இது ஓர் உரைநடை நூல். தமிழ்ச் சங்க வரலாற்றுச் சுருக்கத்தையும் முத்தமிழ் இயல்புகளையும் மற்றும் பல தமிழ் மொழியினைப் பற்றிய சிறந்த குறிப்புக்களையும் கொண்டு திகழும் நூல். ஆராய்ச்சியாளர்களுக்குப் பெருந்துணை செய்யவல்லது. எழுதியவர் டாக்டர் சாமிநாதய்யர். காலம் கி.பி. 20-ஆம் நூற்றாண்டு.

சங்கரசோழன் உலா = இது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. அகப்பொருள் தழுவிய நூல்.