பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கர நாராயணத் திரட்டு

484

சதுர் அகராதி


சங்கர நாராயணத் திரட்டு 484 சதுர் அகராதி

சங்கர நாராயணத் திரட்டு = சுயம்பிரகாச யோகியார் என்பவர் தேவாரம், திரு வாய்மொழியாகிய இரு பெருந்தோத்திர நூல்களிலிருந்து திரட்டிய 1100 பாடல்களைக் கொண்டு 52 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட நூல். சைவ சமய பரமாகவும், வைஷ்ணவ சமய பரமாகவும் உள்ள பாடல்களின் தொகுப்பு இதில் காணப்படுதலினால் இப்பெயர் பெற்றது. தொகுக்கப்பட்ட காலம் அறிதற்கு இல்லை.

சங்கற்ப நிராகரணம் = இது சைவசித்தாந்த சாத்திரம் 14கனுள் ஒன்று. இதனை எழுதியவர் கொற்றவங்குடி உமாபதி சிவாசாரியர். இதற்குத் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் உரை எழுதியுள்ளார். காலம் கி. பி. 14-ஆம் நூற்றாண்டு. இந்நூலில் மாயாவாதி ஐக்கியவாதி முதலான வாதிகளைத் தர்க்க முறைப்படி மறுத்துச் சைவ சித்தாந்த மேன்மையை அறிவித்திருப்பதை அறியலாம். இப்பெயரால் கி. பி. 19-ஆம் நூற்றாண்டில் திகழ்ந்த இராமானந்த சுவாமிகளும் ஒரு நூலையியற்றியுள்ளார்.

சசிவண்ணபோதம் = இது ஒரு வேதாந்த நூல். இதனைத் தத்துவராயர் என்பவர் பாடினர். காலம் கி.பி. 15- ஆம் நூற்றாண்டு. சசிவண்ணன் என்பவன் தீய வழியில் நடந்து பெரு நோயுற்று வருந்த அவன் நல்வாழ்வு அடைய எழுதப்பட்ட நூல்.

சடகோபர் அந்தாதி = கம்பரால் பாடபபட்டது. கம்பர் தாம் எழுதிய இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றியபோது அரங்கர் நந்தம் சடகோபனைப் பாடினையோ? என்று கேட்டபோது, இந்த நுலைப் பாடினர். சடகோபர் என்பார் நம்மாழ்வர். காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டு.

சதுர் அகராதி = ரெவரண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் எழுதிய நூல் இந்நூல். தமிழில் உள்ள பெயர் வினை, இடை, உரிச் சொற்களுக்குரிய சொற் பொருள் விளக்கம் தரும் நூல். காலம் கி. பி. 18-ஆம் நூற்றாண்டு.