பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சந்திரவாணன் கோவை

485

சாதவாகனம்




  
இது ஆங்கில மொழியில் அமைந்த அகராதி போலத் தமிழ் மொழியிலும் அகராதி அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட நூல் ஆகும். தமிழில் முதல் முதல் உண்டான அகராதி இதுவே ஆகும்.

சந்திரவாணன் கோவை = பிறவிக் குருடராக விளங்கிய அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பவர் பாடிய நூல். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. அகப்பொருள் தழுவிய நூல்.
 
சம்பந்தர் பிள்ளைத்தமிழ் = சைவ சமய குரவர்கள் நால்வருள் ஒருவரான திருஞான சம்பந்தர் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ். இதனைப் பாடியவர் மாசிலாமணித் தேசிகர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.
 
சரபோசிராஜன் குறவஞ்சி = கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடிய நூல். இது தஞ்சை பெரியகோவில் திருவிழாவின் போது, நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. சரபோசி மகாராஜன் காலத்திலேயே இந்நூல் இயற்றப்பட்டது. காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. நாடக இலக்கிய வகையைச் சார்ந்தது. படிக்கச் சுவை தரும் நூல்.

சா


சாகுந்தல நாடகம் = இது காளிதாசர் இயற்றிய வடமொழி சகுந்தல நாடகத்தைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட உரைநடை நூல். இதைத் தொடர்ந்து சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்னும் நூலும் எழுதப்பட்டது. இவ்விரு நூற்களால் நாடகத் தோற்றம், காளிதாசர் காலம், மதம் முதலான அரிய குறிப்புக்கள் காணக் கிடைக்கும். இந்நூற்கள் ஆராய்ச்சியாளர்கட்குப் பெருந்துணையாகும். இவ்விரு நூற்களின் ஆசிரியர் மறைமலையடிகள் என்னும் சுவாமி வேதாசலம் என்பவர். கி.பி. 20-ஆம் நூற்றாண்டு.

சாதவாகனம் = செய்வித்தோனால் பெயர்பெற்ற