பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த பிந்து

488

சிலப்பதிகாரம்


  
ஆவார். காலம் கி.பி. 20-ஆம் நூற்றாண்டு.

சித்தாந்த பிந்து = சங்கராசாரிய சுவமிகள் அத்வைத கொள்கையர் ஆயினும்,
சைவசித்தாந்தக் கொள்கையினையும் தமது ஆழ்ந்த கருத்தாகக் கொண்டவர் என்பதற்கு இந்த நூலே போதிய சான்றாகும். இது வடமொழியில் உள்ளது. இதனைத் தமிழ் மொழியில் ராமசந்திர சாஸ்த்திரி என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்பின் காலம் கி.பி. 20-ஆம் நூற்றாண்டு. இதனால் "ஓரும் வேதாந்தத்து உச்சியில் பழுத்துச் சாரம் கொண்ட சைவசித்தாந்தம்" என்பது உண்மை ஆகின்றதல்லவா?

சிந்தனைக் கட்டுரைகள் = தூய செந்தமிழ் நடையில் கட்டுரை எழுதப்
படுவோர்க்குப் பெரிதும் துணைசெய்யும் நூல். ஆங்கிலக் கட்டுரைகளைத் தழுவி எழுதப்பட்டது. இதனை எழுதியவர் மறைமலை அடிகள். காலம் கி.பி. 20-ஆம் நூற்றாண்டு.

சிலப்பதிகாரம் = ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. நாடகத்தமிழிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த நூல். இதனை உரைநடைச் செய்யுள் என்றும், முத்தமிழ் விரவிய நாடகக் காப்பியம் என்றும் கூறுவர். கோவலன் வரலாற்றைக் கூறும் நூல். இதில் புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற முப்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு காண்டமும் காதைகள் என்ற சிறு பிரிவுகளையும் கொண்டது. ஆசிரியர் இளங்கோ அடிகள். இதற்கு அடியார்க்கு நல்லார் என்பவர் சிறந்த உரை எழுதியுள்ளார். பழைய குறிப்பு உரையும் இதற்கு உண்டு. கற்புடை பெண்டிரை உயர்ந்தோர் ஏத்துவர் என்பதும், அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாக இருந்து அழிக்கும் என்பதும், ஊழ்வினை உரியவரை உண்பிக்கச் செய்யும் என்பதும் இந்நூலால் அறியப்படும் சீரிய கருத்துக்களாம். இதன் காலம் கடைச்சங்க காலம். பழங்காலத்துத் தமிழ் நாட்டின் நாகரிகத்தை அறிய இந்நூல் துணை செய்யும். அரிய இசை நாடகங்களைப் பற்