பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிவபெருமான் இரட்டை

491

சிறுபஞ்சமூலம்




  
அறிவிக்கும் நூல். குருவின் மாண்பு, சிவவேடப் பெருமை, ஐந்தெழுத்தின் சிறப்பு முதலானவற்றையும் இது உணர்த்தும். இதன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு.

சிவபெருமான் இரட்டை மணிமாலை = கபிலதேவ நாயனாரால் பாடப்பட்டது. 11-ஆம் திருமுறையில் இணைக்கப்பட்டது. இருபது பாடல்களைக் கொண்டது. ஆசிரியர் சங்ககாலக் கபிலர் அல்லர் என்று கருதப்படுதலின் காலம் கிபி. 10-ஆம் நூற்றாண்டு எனச் சிலர் கூறுவர். இது ஆராய்தற் குரியது.
 
சிவப்பிரகாசம் = சைவசித்தாந்த சாத்திரம் 14 கனுள் ஒன்று. பதி, பசு, பாச இலட்சணங்களும், தீட்சை விதிகளும் இதில் கூறப்படுகின்றன. சிவஞான போத சூத்திரக் கருத்துக்ளைத் தழுவி எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் கொற்றவங்குடி உமாபதி சிவாசாரிய சுவாமிகள். காலம் 14-ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்குத் திருப்பதி சாரச்சாமி, சிதம்பரநாத முனிவர், மதுரை சத்திய ஞானப்பிரகாசர் முதலியோர் உரை எழுதியுள்ளனர். இந்நூல் சம்பந்தமாகச் சிற்றம்பல நாடிகள் சிவப்பிரகாசக் கருத்துரைச் சூத்திரம் என்ற நூலும் (ஆசிரியர் அறிதற்கு இல்லை), நல்ல சிவன் என்பவரால் எழுதப்பட்ட சிந்தனையுரை என்ற நூலும் உண்டு. இது விருத்தப்பாவால் அமைந்த நூல். இந்நூலின் அவையடக்கச் செய்யுளில் "தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றிய நூல் என்னும் எவையும் தீதாகா" என்று குறிப்பிடப்பட்டிருப்பது இக்காலத்துக் கருத்துக்கேற்ற ஒன்றாகும்.

சிறிய திருமடல் = வைணவ சமய தோத்திர நூலாகிய அகப்பொருள் கருத்து நிறைந்த நூல். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்துள் ஒருபிரிவு. இதன் ஆசிரியர் திருமங்கையாழ்வார். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு.

சிறுபஞ்சமூலம் = பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள்