பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தணிகைப் புராணம்

498

தணிகையாற்றுப்படை


மொழிப் புலவரால் பாடப்பட்டது, சுவைமிக்க செய்யுட்களைக் கொண்டது. காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு. இதற்குச் சொக்கப்ப நாவலர் உரை எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள நானுாறு பாடல்களையும் பொய்யாமொழிப்புலவர் பாடிப் பொருள் கூறுகையில் மகிழ்ந்த இந்நூலின் பாட்டுடைத் தலைவனை தஞ்சைவாணன் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயினை உருட்டிச் சிறப்புச் செய்தான் என்பர். தஞ்சைவாணன் என்பவன் தஞ்சாக்கூர் மன்னன். இவன் வாணன் என்றும், சந்திரவாணன் என்றும் கூறப்படுவான். இந்நூலில் வரும் சில துறைகட்குத் திருக்கோவையார் பாடல்கள் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன.

தணிகைப் புராணம் = திருத்தணிகை மான்மியம் கூறும் நூல். கச்சியப்ப முனிவரால் பாடப்பட்டது. சீவக சிந்தாமணி என்னும் நூல் ஒரு சிலரால் சிறப்புறப் பயிலப்பட்டு வந்ததை அறிந்த முனிவர், அந்நூலைப் போன்று சொற்செறிவும் பொருட்செறிவும் துலங்கப் பாடி யருளப்பட்ட நூல். சிலேடைக் கவிகளும், சித்திரக் கவிகளும் இந்நூலில் மிகுதி. தொல்காப்பிய உரிச்சொற்களை இந்நூலில் பெரிதும் காணலாம். புலவர்கள் விரும்பிப் பயிலும் நூல். கி.பி. 18ஆம் நூற்றாண்டு. இதில் உள்ள வள்ளியம்மையார் திருமணத்தைப் பற்றிய கவிகள் கோவைத் துறைகள் அமையப் பாடப்பட்டிருப்பது இன்பம் பயப்பதாகும். கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான். ஐந்து கரங்களுடன் திகழும் மாண்பிற்குக் காரணம் காட்டும் முறை சுவை தருவதாகும்.

தணிகையாற்றுப்படை = ஆற்றுப்படை என்பது பரிசு பெற்ற ஒரு புலவன் பரிசு பெறாத மற்றொருவரிடம் தனக்குப் பரிசில் நல்கியவனது குணங்களையும் அவன் இடத்தையும் கூறி வழிகாட்டி அனுப்புவதாகும். அந்த முறைப்படி முருகப் பெருமான் திருவருளைப் பெற்றவன் அம்முருகனது திருவருள் பெறத் தணிகைநாதன்