பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தண்டலையார் சதகம்

499

தனிப்பாடல் திரட்டு



மீது பாடப்பட்ட நூலாகும் இது. இதனைக் கச்சியப்ப முனிவர் பாடியருளினர். தம் மாணாக்கனான கந்தப்பையர் குன்ம நோயால் துன்புற்ற நிலையினைக் கண்டு சகியாத முனிவர் இந்நூலைப் பாடினர். இதன் காலம் கி. பி. 18-ஆம் நாற்றாண்டு.

தண்டலையார் சதகம் = சதகம் என்பது நூறு செய்யுட்களைக் கொண்ட நூல். தண்டலை என்னும் ஊரில் உள்ள இறைவன் மீது பாடப்பட்ட நூல். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் பழமொழி அமைந்திருக்கும். நீதிகளை அறியவும், பழமொழிகளை உணரவும் பெருந்துணை செய்ய வல்லது. பழமொழிகளைக் கொண்டு இந்நூல் விளங்குதலின் இது பழமொழி விளக்கம் என்ற பெயரையும் பெற்றது. இந்நூலைப் பாடியவர் தண்டலைச் சாந்தலிங்க கவிராயர் ஆவார்.காலம் கி. பி. 15-ஆம் நூற்றாண்டு.

தமிழ் நாவலர் சரிதை = இஃது ஒரு சிறந்த நூல். புலவர்கள் சிலரைப் பற்றியும், சில நூல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுதற்குரிய அரிய குறிப்புக்களைக் கொண்ட நூல். இந்நூலைத் தொகுத்தவரைப் பற்றி அறிதற்கு இல்லை. என்றாலும் திரு. கனகசுந்தரம் பிள்ளை என்பவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்நூலில் 18-ஆம் நூற்றாண்டு வரையில் இருந்த புலவர் வரலாற்றுக் குறிப்புக்களை உணரலாம்.

தமிழ்விடு தூது = இந்நூல் தமிழ்மொழியையே தூது விடுவது போல் அமைந்த நூல். சுவை மிகுந்தது. ஏனைய பொருள் தூது போதற்குரியவை அல்ல என்பதற்குரிய காரணங்களும், தமிழே தூது செல்லுதற்கு எல்லாப் படியாலும் பொருந்துதலுடையது என்பதற்குரிய காரணங்களும் காட்டப்பட்டிருப்பது படித்து இன்புறுதற் குரியவையாகும். இந்நூலாசிரியர் யாவர் என்பது அறிதற்கில்லை. இதனை டாக்டர் சாமிநாதய்யர் பதிப்பித்துள்ளார்.

தனிப்பாடல் திரட்டு = இந்நூல் ஒருவரால் பாடப்பட்ட நூல் அன்று,