பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்கருவைப்

502

திருக்குடந்தைப்


திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி = அந்தாதி என்பது ஒரு பாட்டின் முடிவு அடுத்த பாட்டிற்கு முதலாக அமையப் பாடப்படும் நூலாகும். இது கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபெருமான் மீது பாடப்பட்ட நூலாகும். இது உருக்கமாகப் பாடுதற்குரிய முறையில் அமைந்திருத்தலின் இதனைக் குட்டித் திருவாசகம் என்றும கூறுவர். இதனைப் பாடியவர் அதிவீரராம பாண்டியர் ஆவார். காலம் கி.பி. ஆம் நூற்றாண்டு.

திருக்கலம்பகம் = இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்த அருகக் கடவுள் மீது பாடப்பட்டதாகும். இங்குக் கூறப்பட்ட அருகக் கடவுளின் செயல்கள் பலவும் சிவபெருமான் செய்த செயல்களாகக் குறிப்பிட்டிருப்பது வியப்பைத் தரும். இந்நூலை இயற்றியவர் திருத்தேவர் என்பவர். காலம் கி.பி.14-ம் நூற்றாண்டு. திருக்கலம்பகம் என்ற பெயரால் மற்றொரு நூலும் உண்டு. அது சைவத் திருமுறை பன்னிரண்டனுள் பதினேராம் திருமுறையுள் ஒரு பிரபந்தமாகத் திகழ்கிறது. இது ஞானசம்பந்தர் மீது நம்பியாண்டார் நம்பிகள் கி.பி.10 நூற்றாண்டில் பாடப்பட்ட ஒரு தோத்திர நூலாகும்.

திருக்காவலூர் கலம்பகம் = இது கிறிஸ்தவச் சமயச் சார்புடைய நூல். இதனைத் தமிழில் பாடியவர் ரெவரெண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார். இதன் காலம் 17ஆம் நூற்றண்டின் இறுதி.

திருக்காளத்திப் புராணம் = இது காளாஸ்திரி என்று வழங்கப்பெறும் திருக்காளத்திஸ்வரர் திருத்தலத்தின் வரலாற்றைக் கூறும் நூல். சீகாளத்திப் புராணம் என்ற புராண நூலும் உண்டு, அதனினும் இது வேறானது. இதன் ஆசிரியர் ஆனந்தக்கூத்தர் என்பவர். கி.பி.16 ஆம் நூற்றாண்டு.

திருக்குடந்தைப் புராணம் = இது கும்பகோணத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும் நூல். இதன் வாயிலாக மகாமகத் தீர்த்தத்தின் வரலாறு, கும்பேஸ்வரர் என்ற பெயரை