பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்

503

திருக்குறள் வளம்


இறைவர் பெற்ற வரலாறு முதலானவற்றை அறிந்து கொள்ளலாம். இதனைப் பாடியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையாவார். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு. இத்தலத்து அம்பிகையாகிய மங்களாம்பிகையம்மையார் மீதும் பிள்ளை அவர்கள் பிள்ளைத்தமிழ் நூலையும் பாடியுள்ளார்.

திருக்குறள் = தமிழ் மொழியில் உள்ள ஒப்பு உயர்வு அற்ற நூல். 1330 குறள் வெண்பாவால் ஆன நூல்.இது பதினெண் கீழ்க்கணக்கு நூலைச் சார்ந்தது. இதில் அறத்துப்பால்,பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. இந்நூல் பயிற்சியால் பல அரிய கருத்துக்களை எல்லாம் தெரிந்து கொள்ளலாம். இந்நூலினது அருமை காரணமாக மேனாட்டு மொழிகள் பலவற்றிலும், கீழ்நாட்டு மொழிகள் பலவற்றிலும் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழியில் அமைந்திருப்பது தமிழ் நாட்டவர்க்கு ஒரு தனிப்பெருமையாகும். இந்நூலுக்குப் பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவற்றுள் பரிமேலழகர் உரையே சிறந்தது. இதன் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்கு முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வரலாற்றை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை திருவள்ளுவப் பயன் என்ற பெயர்கள் உண்டு.

திருக்குறள் வளம் = இந்நூல் திருக்குறளுக்கு இதுவரையில் வந்துள்ள உரை நூல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது. இத்துடன் குறட் கருத்துக்களைக் கொண்ட செய்யுட்களையும் கொண்டு திகழ்வது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய மூன்று பாலும் தனித்தனி நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய தொண்டை மேற்கொண்டு செம்மையுறப் பதிப்பித்து வெளிப்படுத்தியவர் தருமபுர ஆதினகர்த்தரான ஸ்ரீலஸ்ரீ திருஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளாவார். இந்நூல் கி.பி. 20 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு