பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்செந்தூர் பிள்ளைத்

505

திருத்தொண்டர் திருநா


 இது, சைவத் திருமுறைகளுள் 8வதாகத் திகழ்வது. இது சிற்றின்பச் சுவைதரும் முறையில் அகப்பொருள் இலக்கணத்துப்படி பாடப்பட்டிருப்பினும், உள்ளூரப் பேரின்பப் பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் உண்மையைத் திருக்கோவையார் உண்மை எனற நூலாலும் நன்கு உணரலாம். இந்நூலுக்குச் சிறந்த உரை ஒன்று பேராசிரியர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அவ்வுரை திருக்கோவையாரின் நுண்பொருள்களைத் தெள்ளிதின் அறியப் பெருந்துணை செய்யவல்லது. இந்நூலின் ஆசிரியர் மாணிக்க வாசகர். காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு. அந்தணர் வேதம் என்றும் யோகியர் ஆகமத்தின் சாரம் என்றும், தர்க்கம் உணர்ந்தவர் தருக்க நூல் என்றும், புலவர்கள் இலக்கியம் என்றும் காமுகர் காம நூல் என்றும் கருதுதற்குரிய முறையில் இந்நூல் அமைந்துள்ளது.

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் = இது திருச்செந்தூர் முருகப் பெருமான் மீது பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. இதனைப் பாடியவர் பகழிக்கூத்தர். இவர் வயிற்று நோயால் வருந்தினபோது, அந்நோய் நீங்க முருகனை வேண்டி, இந்நூலைப் பாடியருளினர். இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு. இந்நூலாசிரியர் மீது அன்பு கொண்ட முருகப் பெருமான் இந்நூலுக்குப் பரிசிலாக முத்துமாலையை அளித்துள்ளார்.

திருத்தொண்டர் திருநாமக்கோவை = கோவை என்ற அகப்பொருள் தழுவிய நூலோ என்று கருத வேண்டா. இது சிவனடியார்கள் அறுபத்து மூன்று பேர்களுடைய பெயர்களையும், தொகை அடியார்கள் ஒன்பதின்மர் யாவர் என்பதையும் கோவைப்படுத்தி அறிவிக்கும் நூலாகும். இதனைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் உண்மைச் சிவனடியார் பற்றையும், வஞ்சகம், அற்பபுத்தி, மயக்க அறிவு ஆகியவை நீங்கப் பெறுவர். நித்தியமாய் வாழ்வர். இதனைப் பாடியவர்