பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருபுனல்

48

இலகு


இருபுனல் = கீழ் நீர் மேல் நீர்
இருப்பு = ஆசனம், நிலை, இருப்பிடம், பொருள் முதல்
இருபோகம் = இரண்டுமுறை விளைச்சல்
இருப்புச்சுற்று = பூண்
இருமணம் = வஞ்சகம், துணிவு இன்மை
இரு மருந்து = சோறும் நீரும்
இருமா = பத்தில் ஒரு பகுதி
இருமாவரை = எட்டில் ஒரு பகுதி
இருமுதுகுரவர் = பெற்றோர்
இருமை = இம்மை மறுமை, இரண்டு, இரு தன்மை, உள்ளும் புறமும், கருமை, பெருமை
இரும்பன் = காரெலி, அகழ்எலி
இரும்பு = கடிவாளம், கிம்புரி, இரும்பு, ஆயுதம்
இரும்பை = குடம், பாம்பு
இரும்பொறை = சேரர் பட்டப் பெயர்
இருவி = தினைக்கதிர் கொய்ததாள்
இருவில் = கரிய ஒளி
இருவினை = நல்வினை தீவினை
இருவேரி = வெட்டிவேர்
இருளறை = ஆணவமலம்
இருளி = பன்றி, கருஞ்சீரகம்
இருளுவா = அமாவாசை
இருளை = நாணம்
இருள் = நரகம், கடுமை, மயக்கம், அறியாமை, ஆணவமலம், மலம், இருட்டு, துன்பம், குற்றம்,கறுப்பு, யானை
இருள்வரை = கிரெளஞ்ச மலை
இருள்வலி = சூரியன்
இரேகை = எழுத்து, வரி
இரேசகம் = காற்றை வெளிவிடுதல்
இரேணு = அழகு, அணு, துகள்
இரேதசு = சுக்கிலம்
இரேவதி = பலதேவன் மனைவி, ஒரு நட்சத்திரம்
இரை = ஒலி, உணவு
இரெளத்திரம் = பெருங்கோபம்
இரெளரவம் = ஒருநரகம், சிவாகமங்களுள் ஒன்று
இலகடம் = அம்பாரி
இலகரி = வெள்ளம், வெறி
இலகிமா = மிக நுண்மையாதல், ஒரு சித்தி
இலகு = எளிமை, சிறுமை, காலவகை, அகில், குற்றெழுத்து