பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமயிலைத் தலபுராணம்

508

திருமுறை


படும். இது சைவத் திருமுறை பன்னிரண்டனுள் பத்தாம் திருமுறையாக இருப்பது. இதனைப் பாடியவர் திருமூலர் என்னும் பேராசிரியர் ஆவார். இவர் ஒரு வருடம் மெளனமாக யோகத்தில் இருந்து, பின் விழித்து ஒரு பாடலைப் பாடிப், பின்னரும் யோகத்தில் அமர்ந்து அந்த அனுபவத்தில் மூவாயிரம் பாடலைப் பாடினார் என்பர். இந்நூல் சித்தாந்த நுண்பொருள்களையும் ஆகமக் கருத்துகளையும் கொண்டது. மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய நீதிகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டது. இதன் காலத்தைப் பற்றிய பலவித கருத்து வேற்றுமைகள் உண்டு. எவ்வாறு இருப்பினும் இது சைவ சமயாசிரியர் நால்வர் காலத்துக்கு முற்பட்டது. இதன் காலத்தைக் கி.பி.4ம் நூற்றாண்டு என்று ஒருவாறு கூறலாம்.

திருமயிலைத் தலபுராணம் = இது சென்னை மயிலாப்பூர் திருத்தலத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும் நூல். இதன் ஆசிரியர் அமிர்தலிங்க தம்பிரான் என்பவர். இதற்குக் காஞ்சி சபாபதி முதலியார் என்பவர் உரை எழுதியுள்ளார். காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு.

திருமுருகாற்றுப்படை= ​ இது முருகப் பெருமான் திருப்பெயரால் நக்கீரரால் பாடப்பட்ட சிறந்த இலக்கியச் செறிவுடைய பாட்டாகும். இதனை நித்தமும் பாராயணம் செய்து வரின் முருகன் திருவருளைப் பெறலாம். இது பத்துப்பாட்டில் முதல் நூலாக அமைந்தது. இதில் முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளைப் பற்றி அறியலாம். இயற்கை அழகும், அனபர்கள் முருகனை வழிபடும் முறையும் இதில் குறிப்பிடப்ப்ட்டுள்ளன. காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை உண்டு.

திருமுறை = சைவசமய நூல்களின் தொகை நூல் வகையைச் சேர்ந்தது.இதனுள் திருஞான சம்பந்தர் தேவாரம் முதல் மூன்று திருமுறைகள்,அப்பர் தேவாரம் நான்கு முதல் ஆறு திருமுறைகள், சுந்தரர் தேவாரம் ஏழாவது திருமுறை, மாணிக்கவாசகர்