பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவிளையாடற் புராணம்

512

திருவெம்பாவை




  
தேவர், வேணாட்டடிகள், பூந்துருத்தி நம்பிக்காடவர் ஆகியவர்கள் பாடியுள்ள திருப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் பல சிவபெருமான் மீதும், சில முருகன் மீதும், பாடப்பட்டுள்ளன. இது ஒரு தொகுப்பு நூல். காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு. இதில் தேவாரப் பதிகத்தில் குறிப்பிடப்படாத பண்ணும் உண்டு.
 
திருவிளையாடற் புராணம் = இது மதுரைச் சொக்கநாதரது 64 திருவிளையாடல்களை அறிவிக்கும் நூலாகும். இலக்கியச்செறிவும், சித்தாந்தக் கருத்துக்களும், கவி நயங்களும் மிகுதியும் கொண்ட நூல். தமிழின் பெருமையினை வீறு கொண்டு விளம்பும் நூல். இதில் மதுரைக்காண்டம், கூடல்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் உள்ளன. இந்நூலால் அசுவ இலக்கணம், இரத்தின இலக்கணம் முதலான அரிய குறிப்புக்களை அறிந்து கொள்ளலாம். இந்நூலைப் பாடியவர் வடமொழி தென்மொழி அறிந்த பரஞ்சோதி முனிவர் ஆவார். இவரது காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு. சிவஞான முனிவர் தமது படுக்கையில் எப்போதும் வலப்பக்கத்தே பெரியபுராணத்தையும், இடப்பக்கத்தே இப்புராணத்தையும் வைத்திருப்பாரானால் இதன் மாண்பை மேலும் கூறவேண்டா அன்றே?

திருவுந்தியார் = இது சைவசித்தாந்த சாத்திரம் 14இல் ஒன்றாகும். உந்தியை முன்னிலைப்உபடுத்திச் சித்தாந்தக் கருத்துக்களை இந்நூல் அறிவிக்கின்றது. இதனைப் பாடியவர் திருவியலூர் உய்யவந்த நாயனார் ஆவார். இதன் பெருமையை உணர்ந்து உந்தி என்னும் சொல்லுக்கு முன் திரு என்றும், பின் ஆர் விகுதியும் கொடுத்துக் கூறப்பட்டதனால் இது திருவுந்தியார் எனப்பட்டது. காலம் கிபி.12ஆம் நூற்றாண்டு. சித்தாந்த சாத்திரம் 14 நூற்களில் முன்னர்த் தோன்றிய நூல்.
 
திருவெம்பாவை = மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தினுள் விளங்கும் சிறந்த பாடல் பகுதிகளில் ஒன்றாகும். இயற்கை