பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவேங்கட சதகம்

513

திருவொற்றியூர் முருகன்




  
அழகும் மாதர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டே நீராடப் போகும் முறையும், அவர்கள் தமக்குள் ஏசிப்பேசிச் செல்லும் தன்மையும் சுவை தருவனவாகும். மேகத்தை உமாதேவியாக உருவகப்படுத்திக் கூறும் பாடல் இன்பம் பயப்பதாகும். பாவை நோன்பின் காரணமாக மாதர்கள் பாடும் முறையில் இது அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் பாடப்பட்டது. பாவை நூல்களுள் இது முதன்மையானது என்று கருதப்படுகிறது. இதன் காலம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு.

திருவேங்கட சதகம் = திருவேங்கடமுடையான் திருப்பெயரால் இந்நூல் பாடப்பட்டமையால், இது இப்பெயர்பெற்றது. இதனைப்பாடியவர் நாராயண பாரதி என்பவர் ஆவார். நீதிகள் பல இதில் கூறப்பட்டுள்ளன. காலம் 18ஆம் நூற்றாண்டு.

திருவேங்கடத்தலபுராணம் = திருப்பதித் திருத்தலத்தைப் பற்றிப் பாடப்பட்ட நூல். இதனைப் பாடியவர் வீரராகவ அய்யங்கார். காலம். கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. இதில் திருப்பதி மலையில் உள்ள தீர்த்தங்களின் விசேடத்தைப் பற்றியும், பூசித்துப் பேறு பெற்ற அன்பர்களைப் பற்றியும் அலர்மேல்மங்கைத் தாயார் திருமணத்தைப் பற்றியும் அறியலாம்.

திருவொற்றியூர்ப் புராணம் = சென்னைக்கடுத்த திருவொற்றியூரைப் பற்றிய வரலாற்றைக்கூறும் நூல். இதனைப் பாடியவர் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் என்பவர். காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

திருவெற்றியூர் முருகன் மும்மணிக் கோவை = சுவாமி வேதாசலம் என்னும்
மறைமலையடிகளால் பாடப்பட்டது. இவர் தூய செந்தமிழ் உரைநடை நூல்களையும் ஆராய்ச்சி நூல்களையும் எழுதும் ஆற்றலுடையவர். இவர் செய்யுள் இயற்றுவதிலும் வல்லுநர் என்பதையும் காட்டுதற்குரிய முறையில் சிறந்த இலக்கியச் செறிவுடன் விளங்கும் நூல். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.