பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொன்னூல் விளக்கம்

516

நந்தனார் சரித்திரம்


பூரணர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடனார் போன்றவர்கள் உரை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் என்பவர். காலம் இடைச்சங்க காலம்.

தொன்னூல் விளக்கம் = இது தமிழ் மொழியில் உள்ள சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களை சுருக்கிக் கூறும் வசன நூால். இதனை எழுதியவர் ரெவரண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் ஐந்திலக்கணங்களின் விளக்கங்களை தெற்றத் தெளிய உணரலாம்.

தொண்டை மண்டல சதகம் = இது தொண்டை மண்டலத்தைப் பற்றிப் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. இதன்மூலம் தொண்டை நாட்டுத் தொடர்புடைய புலவர்கள் இன்னின்னார் என்பதையும் தெற்றத் தெளிய அறிந்து கொள்ளலாம். இந்நூலைப் பாடியவர் படிக்காசுப் புலவர். காலம் 17-ஆம் நூற்றாண்டு.


நந்தனார் சரித்திரக் கீர்த்தனை = நந்தனாருடைய சரித்திரத்தைக் கீர்த்தனைகளின் மூலம் பாடி அமைத்துள்ள சிறந்த நூல். இதுபோதும் நந்தனார் நாடகம் நடத்துபவர் இதனை அடிப்படையாகக் கொண்டே நடத்துகின்றனர். இதில் அமைந்த கீர்த்தனைகள், செவிக்கு இனிமையுடையனவாய், உருக்கமுடையனவாய் இருக்கின்றன. இதற்கு முதலில் சாத்துகவி கொடுக்க மறுத்த மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களே பின்னர் இதன் கீர்த்தனைகளை இதன் ஆசிரியர் பாடிக் காட்டிய போது உள்ளம் பரவசப்பட்டுச் சாத்துகவி அருளினர் என்று அறியப்படுதலிலிருந்து, இந்நூலின் மாண்பை அறியலாம். இதனைப் பாடியவர் கோபால கிருஷ்ண பாரதியார். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. இந்தக் கீர்த்தனையில் கூறப்