பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்னெறி

518

நாலடியார்




  
இதன் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளார். அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை மயிலைநாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை, விசாகப் பெருமாளையர் உரை, இராமானுசக் கவிராயர் உரை, ஆறுமுக நாவலர் உரைகளாம். இவற்றுள் சங்கர நமசிவாயர் உரை விருத்தியுரை எனப்படும். இவ்வுரையினைத் திருத்தம் செய்து சில அரிய குறிப்புடன் சிவஞான முனிவரும் ஓர் உரை செய்துள்ளார்.

நன்னெறி = நல்ல நெறிகளை யுணர்த்தும் நாற்பது வெண்பாவாலான நூல். இதனை இளமையில் பயின்று, பின் வாழ்க்கையில் பயின்ற வண்ணம் நடப்பதற்கு ஏற்ற நீதிகளையும் கருத்துக்களையும் கொண்ட நூல். இதனைப் பாடியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காலம். கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.


நா


நாச்சியார் திருமொழி = இது ஸ்ரீ ஆண்டாள் அம்மையார் பாடிய தோத்திர நூல். திருமாலின் மீது பாடப்பட்டது. நாச்சியார் என்பவர் ஈண்டு ஸ்ரீஆண்டாள் அம்மையார் ஆவார். இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தத்துள் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் காலம் கி.பி. 9 ஆம் நூற்றண்டு. ஸ்ரீ ஆண்டாள் அம்மையார், தம்மைத் திருமால் மணவாளனாக வந்து மணந்த செய்திகளைத் தம் தோழிக்கு கூறும் முறையில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்டு, வைதீக முறைப்படி திருமண்ச் சடங்குகள் நடைபெறும் குறிப்புக்கள் பலவற்றை அறிவிக்கும நூல்.

நாராயண சதகம் = நீதிகளை 100 பாடல்களால் விளக்கும் நூல். ஆசிரியர் நாராயண பாரதி. காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.

நாலடியார் = நான்கடிகளைக் கொண்டு சிறப்புடன் திகழ்வதால் நாலடியார் எனப்படும். திருக்குறளோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் நீதி நூல். "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"