பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நேமிநாதம் 522 பட்டினத்தார் பாடல்



நே

நேமிநாதம் = இது ஒர் இலக்கண நூல். வெண்பாவால் அமைந்தது. இதனைப் பாடியவர் குண வீரபண்டிதர். காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு. இது சின்னூல் என்றும் கூறப்படும்.

நை

நைடதம் = நிடத தேசத்து மன்னனாம் நளனது வரலாற்றை விருத்தத்தால் கூறும் நூல். புலவர்க்கு ஒளடதம் என்னும் பழமொழியே இதன் சிறப்பை உணர்த்தும். இன்பச்சுவை இனிது நுகர விரும்புவார்க்கு இது சிறந்த நூலாகும். இதனை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர். காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

பஞ்சதந்திர விருத்தம் = மித்திர பேதம், சுகிர்ல லாபம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம்பிரேட்சிய காரித்துவம் (சினேகத்தைப் பிரித்தல், சினேகத்தைப் பெறுதல், அடுத்துக் கெடுத்தல், கையில் கிடைத்த பொருளை ஒழித்தல், ஆராயாமல் செய்தல்) ஆகிய ஐந்து தந்திரங்களை கூறும் நூல். இதனைப் பாடியவர் வீரமார்த்தாண்ட தேவர். காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. இந்த நூலுக்கு அழகான முறையில் உரைநடை நூலும் உண்டு. இதனை எழுதியவா் தாண்டவராய முதலியார்.

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல் = பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்திருக்கின்றனர். அவர்களுள் இரண்டாவது பட்டினத்தார் பாடல்களே, பட்டினத்தார் பாடல் என வழங்கப்பட்டு வருகிறது. இதில் கச்சி யேகம்பமாலை என்பதும், சிதம்பரத்தின் மீது பாடப்பட்ட அகவல்களும், உடற்கூற்று வண்ணமும், எந்நாள் கண்ணிகளும், தாயாருக்குத் தகன கிரியை நடத்தியபோது பாடிய பாடல்களும், திருவொற்றியூர் தலத்திலும், திருவிடைமருதுார் முதலான தலத்திலும் பாடப்பட்ட பாடல்களுள் உள்ளன. திருவேகம்ப மாலையில் குலாமர் என்ற இந்துஸ்தான் மொழிச்சொல்