பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டினப்பாலை 523 பணவிடுதூது



எடுத்து ஆளப்பட்டிருத்தலின், முஸ்லிம்களின் இயக்கம் தமிழ் நாட்டில் மிகுதியும் இருந்த காலத்தில் இந்நூல் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பது புலகினாகிறது. ஆகவே இந்நூல் தோன்றிய காலத்தை 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என யூகிக்கலாம். முதல் பட்டினத்தார் என்பவரே திருவெண்காட்டடிகள் என்னும் பட்டினத்தாராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர் இருந்த காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. அவர் பாடிய பாடல்கள் சைவத் திருமுறை பன்னிரண்டனுள் 11 ஆம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ளன. அவை திருவிடைமருதுார் மும்மணிமாலை, கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒரு பஃது என்பன.

பட்டினப்பாலை = சங்கம் மருவிய பத்துப்பாட்டு என்னும் தொகை நூலில் ஒன்றாகும். கரிகால் வளவன் காவிரிப்பூம்பட்டினத்தை அரசிருக்கையாகக் கொண்டு, அரசாண்டபோது அவனது சிறப்பு, அவன் நாட்டின் சிறப்பு முதலியவை கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பட்ட வஞ்சி நெடும்பாட்டாகும். இந்நூலைப் பாடிய காரணத்தால், கரிகாற்சோழன், பதினாறு நூறாயிரம் பொற்காசுகளைப் புலவர்க்குக் கொடுத்தான். இந்நூல் வாயிலாகத் தமிழ் நாட்டின் நிலையினையும், நாகரிகப் பண்பினையும் காணலாம். இதில் கலங்கரை விளக்கத்தைப் பற்றிய குறிப்பு (light house) காணப்படுவது குறித்து மகிழ்தல் வேண்டும். காலம் கடைச்சங்க காலம். இந்நூலுக்கு ஆராய்ச்சி நூல் ஒன்றைப் பேரறிஞர் மறைமலை அடிகள் எழுதியுள்ளார். அது ஆராய்ச்சியாளர்க்குப் பெருந்துணை செய்ய வல்லது.

பணவிடுதூது= இதன் மூலம் பணத்தின் மாண்பும், ஏனைய பொருள்களைத் தூது அனுப்புவதிலும் பணத்தை தூதாக அனுப்புவதற்குரிய கார