பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிற்றுப்பத்து 525 பதினோராம் திருமுறை



பெருந்துணை செய்ய வல்லது. இதில் நூறு பாடல்கள் உண்டு, பத்துப்பத்து என்னும் தொடரே புணர்கையில் இற்றுச் சாரியை பெற்றும் மற்றும் சில மாறுதல் அடைந்தும் இவ்வாறு ஆயிற்று. இவற்றுள் முதல் பத்தும், ஈற்றில் உள்ள பத்தும் கிடைத்தில. இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் மீது குமட்டூர் கண்ணனாரால் பாடப்பட்டது. மூன்றாம் பத்து இமயவரம்பன் தம்பி பல்யானை செல்கெழு குட்டுவன் மீது பாலைக் கெளதமரால் பாடப்பபட்டது. நான்காம் பத்து களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் மீது காப்பியாற்றுக் காப்பியரால் பாடப்பட்டது. ஐந்தாம் பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மீது பரணரால் பாடப்பட்டது. ஆறாம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மீது காக்கைப் பாடினியார் நச்செள்ளையரால் பாடப்பட்டது. ஏழாம் பத்து, செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது கபிலரால் பாடப்பட்டது.எட்டாம் பத்துத் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மீது அரிசில் கிழாரால் பாடப்பட்டது. ஒன்பதாம் பத்து இரும்பொறையின் மீது, பெருங்குன்றூர்க் கிழாரால் பாடப்பட்டது. காலம் கடைச்சங்க காலம். இதற்குக் குறிப்பு உரை உண்டு.

பதினோராம் திருமுறை = இது சைவத் திருமுறை பன்னிரண்டனுள் பதினுேராவதாகத் திகழ்வது. இதில் பாடியுள்ள புலவர்கள் பன்னிருவர். (1) திருவாலாவாயாராகிய மதுரை சொக்கலிங்கப் பெருமான் பாடிய திருமுக பாசுரம் (2) காரைக்காலம்மையார் பாடிய (i) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் (ii) அற் புதத் திருவந்தாதி (iii) திருவிரட்டை மணிமாலை, (3) ஐயடிகள் காடவர்கோன் பாடிய திருவந்தாதி க்ஷேத்திர வெண்பா (4) சேரமான் பெருமாள் நாயனார் பாடிய (i) பொன்வண்ணத்து அந்தாதி. (ii) திருவாரூர் மும்மணிக் கோவை, (iii) திருக்கைலாய ஞான உலா, (5) நக்கீரர் தேவர் நாயனார் பாடிய