பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினோராம் திருமுறை526 பத்துப்பாட்டு




(i) கைலைபாதி காளத்தி பாதி யந்தாதி, (ii) திருவீங்கோய்மலை எழுபது, (iii) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை (iv) திருவெழுக்கூற்றிருக்கை (v) பெருந்தேவபாணி (vi) கோபப் பிரசாதம். (vii) காரெட்டு (viii) போற்றித் திருக்கலிப்பா (ix) திருமுருகாற்றுப்படை (x) திருக்கண்ணப்ப தேவர் திருமறம். (6) கல்லாட தேவநாயனார் பாடிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் (7) கபில தேவ நாயனார் பாடிய (i) மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, (ii) சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை (iii) சிவபெருமான் திருவந்தாதி (8) பரணதேவ நாயனார் பாடிய சிவபெருமான் திருவந்தாதி. (9) இளம்பெருமான் அடிகள் பாடிய சிவபெருமான் திருமும்மணிக் கோவை (10) அதிரா அடிகள் பாடிய மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை. (11) பட்டினத்துப் பிள்ளையார் பாடிய (i) கோவில் நான்மணிமாலை. (ii) திருக்கழுமல மும்மணி்க்கோவை (iii) திருவிடைமருதூர் மும்மணிக் கோவை (iv) திருவேகம்பமுடையார் திருவந்தாதி (v) திருவொற்றியூர் ஒரு பா ஒரு பஃது. (12) நம்பியாண்டார் நம்பிகள் பாடிய (i) திருநாரையூர் வினாயகர் திருவிரட்டை மணிமாலை (ii) கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் (iii)திருத்தொண்டர் திருவந்தாதி (iv) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (v) ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (vi) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை. (vii) ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை (viii) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம். (ix) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை (x) திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை ஆகிய நூற்கள் அடங்கியுள்ளன. இந் நூலில் அடங்கிய புலவர்கள் சங்க காலம் முதல் 11ஆம் நூற்றாண்டு வரையில் திகழ்ந்தவர்கள் ஆவார்.

பத்துப்பாட்டு = சங்கம் மருவிய தொகை நூல்களுள் ஒன்று. இதில் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,