பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரமததிமிரபானு

527

பரிபாடல்


  
பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு , பட்டினப்பாலை, மலைபடுகடாம் (இது கூத்தராற்றுப்படை எனவும் கூறப்படும்) என்னும் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன. இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. கடைச்சங்க காலம். தமிழ் நாட்டு வளம், மக்கள் நாகரிகம், பண்புடைமை முதலானவற்றை அறியப் பெருந்துணை செய்ய வல்லது. இது பாட்டு என்றும் கூறப்படும்.

பரமததிமிரபானு = இது பிற மதங்களின் திறமையைக் காரணத்துடன் எடுத்து விளக்கி, சைவசித்தாந்த மதத்தின் சிறப்பையும் பெருமையையும் இனிதின் எடுத்துக் கூறுவது. இதன் ஆசிரியர் மறைஞான சம்பந்தர் என்று யூகிக்கப்படுகிறது. காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

பரமார்த்த குரு கதை = நகைச்சுவை ததும்பும் முறையில் ரெவரெண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவரால் எழுதப்பட்ட உரைநடை நூல். கி.பி 19ஆம் நூற்றாண்டு.

பராபரக்கண்ணி = தாயுமானவரால் பாடப்பட்டது. பராபரமே என்று ஒவ்வொரு கண்ணியும் முடிதலின் இப்பெயர் பெற்றது. இதில் சிறந்த உண்மைகளும், சீவாத்மாவின் நிலைகளும், பராபரனுடைய மாண்புகளும் கூறப்பட்டுள்ளன. இது தாயுமானவர் பாடலில் ஒரு பகுதி. காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

பரிபாடல் = சங்க நூற்களுள் ஒன்றான எட்டுத்தொகை நூற்களுள் இது ஒரு நூலாகும். பரிபாடல் என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு வகைப் பாடல். அப்பாடலால் இந்நூல் அமைந்துள்ளமையின் இப்பெயர் பெற்றது. இதில் எழுபது பாடல்கள் இருந்தன. ஆனால் அவற்றுள் 24 பாடல்களே கிடைத்தன. இந்நூலில் முருகப்பெருமானைப் பற்றியும், திருமாலைப் பற்றியும், மதுரையைப் பற்றியும், வைகையைப் பற்றியும், கூறப்பட்ட பாடல்களே உண்டு. இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் வழக்க ஒழுக்கங்கள்,